19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜனவரி 14-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 16 நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன.

இந்த நிலையில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இந்திய மகளிர் அணிக்க்கு சபாலி வர்மா என்பவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மைதானங்களில் விளையாடிய அனுபவம் இவருக்கு இருப்பதால் டி20 உலக கோப்பையில் இவர் மிகச்சிறந்த வேண்டும் என்பதற்காக கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலக கோப்பை டி20 போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் குரூப் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
