டென்னிஸ் ஜாம்பவான் செரினா வில்லியம்ஸ் ஓய்வு!! அமெரிக்கன் ஓபன் தொடர் தான் கடைசி;

உலக டென்னிஸ் உலகில் ஆடவர் பிரிவில் ரபேல் நடல் உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான்கள் இன்றுவரையும் பேசப்பட்டு தான் வருகின்றனர். இவர்களைப் போல மகளிர் பிரிவில் செரினா வில்லியம்ஸ் என்ற வீராங்கனையை தெரியாத ஒரு டென்னிஸ்…

serina williams

உலக டென்னிஸ் உலகில் ஆடவர் பிரிவில் ரபேல் நடல் உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான்கள் இன்றுவரையும் பேசப்பட்டு தான் வருகின்றனர். இவர்களைப் போல மகளிர் பிரிவில் செரினா வில்லியம்ஸ் என்ற வீராங்கனையை தெரியாத ஒரு டென்னிஸ் வீரர் கூட இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு அவரின் ஆட்டம் மிகவும் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படும். இத்தகைய ஜாம்பவானாகிய செரீனா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஜாம்பவான் செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெற உள்ளார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக மெரினா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

40 வயதான சரியான செரினா வில்லியம்ஸ் நான்கு ஒலிம்பிக் பதக்கங்கள், 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி தனது குடும்பத்திற்காக நாட்களை செலவிட விரும்புவதாக செரினா வில்லியம்ஸ் தகவல் அளித்துள்ளார். எனினும் அவரின் இத்தகைய முடிவுக்கு பலரும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன