செப்டம்பர் 22.. இதே நாளில் இரண்டு வருடமாக இந்திய அணி செய்த அற்புதங்கள்.. ரோஹித் தலைமையில் மகத்தான சாதனை…

By Ajith V

Published:

கடந்த சில ஆண்டுகளில் ஒரு நாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என எந்த வடிவை எடுத்துக் கொண்டாலும் இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு நிகராக எந்த அணிகளாலும் நிச்சயம் நெருங்கி வர முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. விராட் கோலி, ரோஹித் ஷ்ர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ரிஷப் பந்த், கே எல் ராகுல், பும்ரா என இந்திய அணியில் பல தலைசிறந்த வீரர்கள் இருப்பதால் அவர்கள் எப்படிப்பட்ட எதிரணிகளையும் சமாளித்து திறம்பட டி வருகின்றனர்.

சீனிர் வீரர்கள் இப்படி பலரும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் ஐபிஎல், சையது முஸ்டாக் லி தொடர் என பல முதல் தர கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக நிறைய இளம் வீரர்களும் இந்திய அணியில் இடம்பிடித்து ஆடி வருகின்றனர். இவர்கள் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் சர்வதேச அரங்கில் பிரபலமாக இருக்கும் வெளிநாட்டு வீரர்களை சர்வ சாதாரணமாக டீல் செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் மூன்று ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ள சூழலில், இதில் டி20 உலக கோப்பையும் அவர்கள் சொந்தமாக்கி சரித்திரம் படைத்திருந்தனர். இதில் ரோஹித் ஷ்ர்மா தலைமையில் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணி அச்சுறுத்தலாக விளங்கி வருவதால் ஒவ்வொரு தொடர்களும் இந்திய அணியை மிக அசால்டாக வென்று பல சாதனைகளை புரிந்து வருகிறது.

ஆனால் அதே வேளையில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை அவர்கள் பரிதாபமாக இழந்தது அதிக விமர்சனத்திற்கு காரணமாக அமைந்திருந்தது. இருந்தாலும் அடுத்தடுத்த முக்கியமான தொடர்களில் இந்திய அணி கம்பேக் கொடுத்து அசத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ப்படி ஒரு சூழலில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்காவது நாளில் வெற்றி பெற்று தற்போது தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் ஒரு போட்டி மீதம் இருப்பதால் இந்திய அணி இந்த தொடரை இழப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்படி ஒரு சூழலில் தான் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மிக முக்கியமான ஒரு சாதனையை இந்திய அணி தற்போது டைத்துள்ளது. இதுவரை 580 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள இந்திய கிரிக்கெட் அணி 178 போட்டிகளில் வெற்றியும் 178 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது.

இப்படி இரண்டுமே சமமாக இருக்க, வங்கதேசத்துக்கு எதிராக அவர்கள் வெற்றி பெற்றதால் தோல்வியை விட அதிக சதவீத வெற்றியை 92 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் முதல் முறையாக பதிவு செய்து சாதனை புரிந்துள்ளது. இப்படி செப்டம்பர் 22ஆம் தேதி மிக முக்கியமான நாளாக இந்திய கிரிக்கெட்டிற்கு பார்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 22ஆம் தேதின்று தான் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை முதல் முறையாக இந்திய அணி பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.