சிறந்த தலைவா!! பிறந்தநாள் வாழ்த்துக்கள்; டோனியை புகழ்ந்த சச்சின்!!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். ஆனால் அவரால் உலக கோப்பையை வெல்ல முடியாதது வருத்தமான ஒன்றாக காணப்படுகிறது. இருப்பினும் அவரை ஓய்வுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் கையில் உலக…

Tendulkar Dhoni

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். ஆனால் அவரால் உலக கோப்பையை வெல்ல முடியாதது வருத்தமான ஒன்றாக காணப்படுகிறது.

Sachin Tendulkar 770x433 1

இருப்பினும் அவரை ஓய்வுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் கையில் உலக கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் தான் மகேந்திர சிங் தோனி. மகேந்திர சிங் தோனி என்றால் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் நேசிக்கும் மனிதராக காணப்படுகிறார்.

dhoni 1

அதிலும் அவரிடம் பிடித்தது அவர் கேப்டன்சி தான். எந்த கடினமான சூழ்நிலையிலும் கூலாக இருந்து எதிர்கொள்ளும் குணத்தினை உடையவர். இவர்தான் இந்தியாவிற்கு ஒரு நாள், டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டிக்கான உலக கோப்பை அனைத்தையும் பெற்றுக் கொடுத்த ஒரே நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

dhoni

இத்தகைய மனிதருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இவரது ரசிகர்கள் இவரின் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரோடு இருக்கும் போஸ்டரை ஷேர் செய்து கீழே கமெண்ட் பண்ணி உள்ளார்.

அதில் ஒரு சிறந்த தலைவர், சக டீமேட் மற்றும் பிரிண்ட் என்று கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி எம் எஸ் தோனியின் ரசிகர்களிடமும் பாராட்டு பெற்றுள்ளதாக காணப்படுகிறது.

https://www.instagram.com/p/Cftcq9nM0-f/?utm_source=ig_web_copy_link

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன