ரோஹித்துக்கு இப்டி ஒரு துணிச்சலா.. 9 வருசத்துல முதல் முறையா இந்திய கேப்டன் எடுத்த முடிவு.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..

By Ajith V

Published:

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகித்திருந்தது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மைதானத்தில் ஆரம்பமாகி இருந்தது.

முதல் டெஸ்டை போல இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாத சூழலில், வங்கதேச அணி ஒரே ஒரு மாற்றத்தை மேற்கொண்டிருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்திருந்த வங்கதேச அணியால் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் என்ற ஒரு நெருக்கடியான சூழலில் தான் இந்திய அணியை அவர்கள் எதிர் கொண்டிருந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் போலவே கான்பூர் மைதானமும் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் இரண்டாவது நாளுக்கு பிறகு சுழற்பந்து வீச்சுக்கும் கைகொடுக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அங்குள்ள வானிலை காரணமாக மழை குறுக்கிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி அவர்கள் சொன்னது போலவே இரண்டாவது டெஸ்டின் முதல் நாளே மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. டாஸ் கூட தாமதமாக தான் இந்த போட்டிக்கு போடப்பட்டிருந்த நிலையில் பேட்டிங்கும் எதிர்பார்த்த நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பமாது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 35 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் போட்டியும் அத்துடன் ரத்தானது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர்.

வங்கதேச அணி தரப்பில் கேப்டன் ஷாண்டோ 31 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்து வீச்சில் அவுட்டாக, மொமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவை எதிர்த்து வங்கதேச அணியும் போராடி வருவதால் இனி வரும் நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் தெரிகிறது.

ப்படி ஒரு சூழலில் தான் 9 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் இந்திய அணி எடுத்த முடிவு ஒன்று தற்போது அதிக வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்திருந்தார்.

அதன் பின்னர் கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணி டாஸ் வென்றால் பேட்டிங்கைத் தான் தேர்வு செய்துள்ளனர். ஆனால், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.