தோனிக்கு நடந்த மாதிரியே நடக்கலாம்.. ரோஹித் ஓய்வு முடிவுக்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய கனெக்ஷன்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது சிட்னி மைதானத்தில் கடைசி டெஸ்டில் ஆடி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை தக்க வைத்து வரும் நிலையில்…

Rohit and Dhoni in Test

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது சிட்னி மைதானத்தில் கடைசி டெஸ்டில் ஆடி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை தக்க வைத்து வரும் நிலையில் அதனை முதல் முறையாக பாதி இழந்துள்ளது என்றே சொல்லலாம். நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சூழலில் ஆஸ்திரேலிய அணி இரண்டில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது.

கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை என்றால் பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபித் தொடரை இழக்க வேண்டிய சூழலும் உருவாகும். இதனால் எப்படியாவது வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் மும்முரமாக இந்திய அணி ஈடுபட்டு வருகின்றது.

ஒதுங்கிய ரோஹித்

இதற்கிடையே கடந்த மூன்று டெஸ்ட்களில் கேப்டன்சி மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சொதப்பிய ரோகித் சர்மா கடைசி டெஸ்டில் அணியில் கூட இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பும்ரா இந்திய அணியை தலைமை தாங்கி வரும் சூழலில் ஒரு கேப்டனாக இருந்தும் அவர் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
Rohit Captain

ஒருவர் காயமடைந்தால் அவர் அணியில் இருந்து வெளியே உட்கார வைக்கப்படுவது பொதுவாக விஷயமாக இருக்க கேப்டன் ரோகித்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற போதும் அவர் ஆடும் லெவனில் தேர்வாகாமல் போனது அதிக சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணமும் என்ன என்பது சரிவர தெரியாமல் இருக்கும் சூழலில் இத்துடன் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கருதப்படுகிறது.

தோனிரோஹித் ஒற்றுமை

டெஸ்டில் தனது ஓய்வு முடிவை ரோகித் சர்மா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கேப்டனாக இருந்தும் ஒரு போட்டியில் ஆடாமல் போனது நிச்சயம் அதற்கான அறிகுறியாக இருக்கும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதனிடையே ரோகித் சர்மா ஒருவேளை ஓய்வு முடிவை சிட்னி டெஸ்டுடன் அறிவித்தால் தோனிக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உருவாக வாய்ப்புள்ளது.

எம். எஸ். தோனி டெஸ்ட் அரங்கில் தனது சொந்த மண்ணில் கடைசி டெஸ்ட் போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் ஆடியிருந்தார். இதே போல வெளிநாட்டு மண்ணில் தோனியின் கடைசி டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் அமைந்திருந்தது. ரோகித் தற்போது ஓய்வை அறிவித்தால் தோனியை போலவே அவர் சொந்த மண்ணில் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்திலும் வெளிநாட்டு மண்ணில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.