ரோஹித் சர்மா சதமடித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்திருந்ததுடன் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பயணத்தில் ஒரு கரும்புள்ளியாக இந்த இன்னிங்ஸ் அமைந்ததற்கான காரணத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.
ஹர்திக் பாண்டியா எப்போது மும்பை அணியின் கேப்டனாக மாறி இருந்தோரோ அது முதல் அந்த அணியில் ஏராளமான குழப்பங்களும், விமர்சனங்களும் உருவாகித் தான் வருகிறது. ஹர்திக் கேப்டன் ஆனதன் காரணமாக ரோஹித் சர்மா பக்கம் ஒரு அணியும் ஹர்திக் பக்கம் ஒரு அணியுமாக மும்பை அணிக்குள் பிளவு ஏற்பட்டு வீரர்கள் ஆடி வருவதாகவும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனை மெய்யாக்கும் விதமாக மும்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பெரும்பாலும் ஒரு அணியாக இணைந்த ஆட மறுப்பது போன்று முதலில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த போது தெரிந்திருந்தது. அடுத்த இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வெற்றி பெற்றிருந்த மும்பை அணி மீண்டும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டுள்ளது.
பந்து வீச்சில் பும்ரா தவிர மற்ற அனைவரது ஓவர்களிலும் ரன்கள் அதிகமாக சென்றிருந்ததால் சென்னை அணி 206 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் ரோகித் சர்மா மட்டும் தனியாளியாக போராடி சதமடித்தும் வெற்றி பெற முடியவில்லை. மற்ற வீரர்கள் நேர்த்தியாக ஆடி நல்லதொரு பங்களிப்பை அளிக்க தவறியதால் இந்த போட்டியில் தோல்வியடையவும் நேரிட்டது.
இனிவரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்ததால் தான் மும்பை அணியால் பிளே ஆப் வாய்ப்பை யோசித்துப் பார்க்க முடியும் என்ற சூழலில் ஹர்திக் தொடர்பான விமர்சனங்கள் தான் அதிகமாக இருந்து வருகிறது. எந்த போட்டியில் ஹர்திக் டாஸ் போட வந்தாலும் அவருக்கு எதிரான குரல்கள் அதிகமாக இருப்பதால் இதனை எப்படி அந்த அணியினர் சமாளித்து ஒரு டீமாக நல்ல ஒரு ஆட்ட திறனை வெளிப்படுத்த போகிறார்கள் என்பதே ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறது.
இதற்கிடையில் தான் ரோஹித் சர்மா சதமடித்தும் இந்த போட்டியில் தோல்வியடைந்த போது நடந்த முதல் அரிதான ஒரு சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். இதுவரை ஐபிஎல் தொடரின் சேசிங்கில் ரோஹித் அவுட் ஆகாமல் இருந்த 18 போட்டிகளிலும் அவரது அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோஹித் அவுட் ஆகாமல் சேசிங்கில் நின்ற போதிலும் முதல்முறையாக தோல்வியடைந்துள்ளது. இத்தனை போட்டிகளில் வெற்றியை மட்டுமே தேடி கொடுத்துள்ள ரோஹித், முதல் முறை அதனை தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.