சச்சினின் மோசமான சாதனை.. ஆறே போட்டிகளில் சமன் செய்து ரோஹித் சந்தித்த அவமானம்..

ஒரு கேப்டனாக மட்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் நெருக்கடியான நேரத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்காமல் பேட்ஸ்மேனாகவும் தொடக்க வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு ஒரு அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் தான் ரோஹித் ஷர்மா.…

Rohit sharma equals sachin worst record

ஒரு கேப்டனாக மட்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் நெருக்கடியான நேரத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்காமல் பேட்ஸ்மேனாகவும் தொடக்க வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு ஒரு அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் தான் ரோஹித் ஷர்மா. இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதற்கு ரோஹித்தின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டுமே முக்கிய காரணங்களாக பார்க்கப்பட்டது.

ஆனால், டி20 உலக கோப்பையை வென்றதற்கு பின்னர் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டு ரோலிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார் ரோகித் சர்மா. டி20 உலக கோப்பைக்கு பின்னர் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது.

ரோஹித்துக்கு வந்த சோதனை

ஆனால் அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்ததுடன் மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் நெருக்கடிக்கு மாற்றி இருந்தது. தனது பேட்டிங்கிலும் ரோகித் சர்மா சொதப்ப, கேப்டனாசியிலும் சில முடிவுகள் பிரச்சினையாக மாறி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் நான்கு வெற்றிகளை பெற்றால் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சூழல் இருந்தது.
Rohit as Test Captain

ஆனால் பும்ராவின் தலைமையில் களமிறங்கி இருந்த இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் அதன் பின்னர் ரோஹித் சர்மா கேப்டனாக மீண்டும் வர மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வி கண்டுள்ளது. மேலும் ரோஹித் சர்மா இந்திய அணியை தலைமை தாங்கிய கடைசி ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் தோல்வி அடைந்து ஒன்றில் டிரா செய்துள்ளது. இதே போல, ரோஹித்தின் பேட்டிங்கும் மிக மோசமாக உள்ளது.

சச்சினின் மோசமான சாதனையை சமன் செய்த ரோஹித்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 31 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் ரோகித். இதனிடையே தான் இதற்கு முன்பாக இந்திய கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனை ஒன்றை ரோகித் தற்போது சமன் செய்துள்ளார். கடந்த 1999 – 2000 சீசனில் சச்சின் தலைமையில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருந்தது. அந்த வரிசையில், ரோஹித் தலைமையிலும் இந்திய அணி தற்போது தொடர்ச்சியாக 5 டெஸ்டில் தோல்வி கண்டுள்ளது.
Rohit worst Record

இதை தாண்டி இந்திய அணியின் கேப்டனாக மன்சூர் அலிகான் பட்டாவுடி தலைமையில் இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது தான் அதிகபட்சமாக உள்ளது. சிட்னி மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தால் இந்த மோசமான சாதனையையும் ரோஹித் சமன் செய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.