கில் இருக்கும்போதே ருத்துராஜுக்கு சான்ஸ் கொடுக்க இத பண்ணுங்க.. தவிச்ச இந்திய அணிக்கு செம ஐடியா கொடுத்த பிரபலம்..

By Ajith V

Published:

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரண்டு பேர் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்திற்கான போட்டி இந்திய அணியில் தற்போது பலமாக இருந்து வருகிறது. தொடக்க வீரராக ரோஹித் ஷர்மாவும், விராட் கோலி மூன்றாவது வீரராகவும் பேட்டிங் செய்து வந்த சூழலில், இந்த இரண்டு இடங்களிலும் தற்போது நிறைய வீரர்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.

இதனால், யாரை அடுத்தடுத்த தொடர்களில் களமிறக்க வேண்டும் என்பதே இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக தான் இருந்து வருகிறது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, ருத்துராஜ் உள்ளிட்ட பலருக்கும் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இரண்டு பேரின் இடத்திற்காக போட்டி இருந்து வரும் நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தேர்வு, பெரிய அளவில் விமர்சனங்களை தான் சந்தித்திருந்தது.

டி20 போட்டிகளில் ஒரு நாள் போட்டிகளைப் போல ஆடி ரன் சேர்க்கும் கில் மீது ரசிகர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவிக்க, ஃபார்மில் இல்லாத ரியான் பராக்கையும் அணியில் சேர்த்திருந்தனர். அந்த இடத்தில் ருத்துராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய வீரர்களை இடம்பெறச் செய்திருக்கலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

அப்படி இருந்தும் ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா ஆகியோரது வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால் இவர்களை இடம்பெறச் செய்வதற்கான வழிகளை இந்திய அணி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் நல்ல ஃபார்மில் இருக்கும் ருத்துராஜை டி20 போட்டிகளில் இடம்பெற செய்வது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

“கில் மற்றும் ருத்துராஜ் என இரண்டு பேரையும் ஏன் இந்திய அணியில் ஆட வைக்கக் கூடாது. அவர்கள் இரண்டு பேருமே சிறந்த வீரர்கள். டி20 கிரிக்கெட்டில் கில் மற்றும் ருத்துராஜ் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி நிறைய ரன்கள் சேர்த்துள்ளனர். இதனால் அந்த இரண்டு பேரில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய கூடாது. அவர்கள் தொடர்ச்சியாக ஆடி வருவதை பார்த்தால் கில்லை விட ருத்துராஜ் அனைத்து போட்டிகளில் நன்றாக ஆடி ரன் சேர்த்து செய்து வருகிறார்.

ஆனால் சுப்மன் கில் அதிரடி ஆட்டம் மற்றும் நிதானமாக ஆடுவது என மாறி மாறி செய்யும் திறமையை கையில் வைத்துள்ளார். அந்த இரண்டு பேரில் ஒருவரை தேர்வு செய்வது என்பது கடினமான ஒன்று. அப்படி இருக்கும்போது ஏன் இரண்டு பேரையும் இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது. ஏனென்றால் அவர்கள் இரண்டு பேருமே அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள்” என ராபின் உத்தப்பா கூறி உள்ளார்.