7 மேட்ச் வித்தியாசம்… தோனியின் அரிய ரெக்கார்ட் காலி.. அதிரடி ஆட்டத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடம் பதித்த பந்த்..

By Ajith V

Published:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். முதல்ன்னிங்சில் 46 ரன்களில் ல் அவுட்டானாலும் அதை பெரிதாக அடுத்த இன்னிங்சில் எடுத்துக் கொள்ளாமல் அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் இந்திய அணி எடுத்து வருகிறது.

3 து நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 231 ரன்களை சேர்க்க, சர்ப்ராஸ் கான் மிக துணிச்சலாக ரன் சேர்த்த வண்ணம் இருந்தார். இதனைத் தொடர்ந்து, 4 து நாளிலும் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்திருந்தார்.

மேலும் இவருடன் இணைந்து ஆடிய ரிஷப் பந்த், 3 து நாளில் கோலி, ரோஹித் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இணைந்து ஆடிய ஆட்டத்தை சிறப்பாக பிரதிபலித்து வந்தார். குறைந்த பந்துகளில் 50 ரன்கள் அடித்த ரிஷப் பந்த், சிக்ஸர்கள் மற்றும் போர்களையும் பறக்க விட்டிருந்தார். இதனால், இந்திய அணி தற்போது முன்னிலை வகிக்க தொடங்கி விட்டதால் நியூசிலாந்து அணிக்கு எவ்வளவு இலக்கை நிர்ணயிக்கும் என்பதும் அடுத்து முக்கியமாக பார்க்கப்பட உள்ளது.

ரிஷப் பந்த் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோரை தொடர்ந்து ராகுல், ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்களும் பேட்டிங்கில் பலமாக இருப்பதால் நிச்சயம் இந்திய அணி சவாலான இலக்கையும் நியூசிலாந்து அணிக்கு கொடுக்கும் என்றே தெரிகிறது. கைவிட்டுச் சென்ற போட்டியை மீண்டும் இந்திய அணி கொண்டு வந்துள்ள நிலையில் ரசிகர்களும் மிக உற்சாகமடைந்துள்ளனர்.

இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தோனியின் முக்கியமான சாதனையை உடைத்து ரிஷப் பந்த் புதிய வரலாற்றை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக எழுதியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் தோனி, பார்த்தீவ் படேல், தீப் தாஸ்குப்தா என பல விக்கெட் கீப்பர்கள் ஆடி உள்ளனர். ஆனால், அதில் ரிஷப் பந்த் வெளிப்படுத்தி வரும் அதிரடி ஆட்டத்தை வேறு பலரும் நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் தான், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரன்கள் சேர்த்து வரும் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,500 ரன்களையும் கடந்துள்ளார். இதன் மூலம், இந்திய விக்கெட் கீப்பராக வேகமாக 2,500 ரன்களைத் தொட்ட இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக, 69 இன்னிங்ஸ்களில் தோனி 2,500 ரன்கள்டித்திருந்த நிலையில், அதனை 62 இன்னிங்ஸ்களில் கடந்து ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.