அடுத்த தோனினு சொல்லி இப்ப இப்டி ஆகிடுச்சே.. ரிங்கு சிங் சந்தித்த துயரம்.. அதுவும் இப்டி ஒரு விஷயத்துலயா..

By Ajith V

Published:

Rinku Singh Vs Dhoni : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை ரிங்கு சிங் மேற்கொண்ட போது இந்திய அணியின் வருங்காலத்தில் மிக முக்கியமான வீரராக இருப்பார் என கருதப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் இந்திய அணிக்காகவும் ஒரு சில சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி வந்த ரிங்கு சிங் ஆட்டம் தற்போது அதிகமாக விமர்சனத்தை சந்தித்து வருகிறது. ஐபிஎல், ரஞ்சித் தொடர் என முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல இளம் வீரர்கள் இந்திய அணியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதில் மற்ற பல வீரர்களை விட ஜெய்ஸ்வால் தொடர்ந்து இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி வருவதுடன் பல சாதனைகளையும் இளம் வயதிலேயே உருவாக்கி உள்ளார். சச்சின், கோலி ஆகியோருக்கு நிகராக டெஸ்ட் அரங்கிலும் நிறைய சாதனைகளை படைத்து வரும் ஜெய்ஸ்வாலை போல அபிஷேக் ஷர்மா, ருத்துராஜ், ரியான் பராக், ரிங்கு சிங் என பல வீரர்களும் வருங்காலத்திற்கான சிறந்த வீரர்களாக இருப்பார்கள் என கருதப்பட்டு வருகிறது.

ரிங்கு சிங் பரிதாபங்கள்

ஆனால் அதே நேரத்தில் இதில் சில வீரர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காமலும், வாய்ப்புகள் கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்தாமலும் இருந்து வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் ருத்துராஜ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங் உள்ளிட்டோர் சுமாராக ஆடினாலும் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வருகின்றனர்.

Rinku Singh

கடந்த ஏழு டி20 இன்னிங்ஸ்களில் 70 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த அபிஷேக் ஷர்மா தெனாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அரைச்சதம் அடித்து மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார். இனிவரும் போட்டிகளில் அதே ஃபார்மை அபிஷேக் தொடர்வாரா அல்லது மீண்டும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படி அபிஷேக் ஷர்மாவைப் போலவே தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை அதிகமாக வீணடித்து வருகிறார் ரிங்கு சிங். இவர் தோனியை போல வருங்காலத்தில் இந்திய அணியின் சிறந்த பினிஷராக விளங்குவார் என எதிர்பார்த்தால் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார்.

பலரும் ரிங்கு சிங் டாப் ஆர்ட்ரில் பேட்டிங் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு வந்தாலும் அவர் ஆறாவது அல்லது ஏழாவது வீரராக தான் களமிறங்கி வருகிறார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நேரத்தில் அவருக்கு குறுகிய பந்துகள் கிடைப்பதால் இதன் காரணமாகவே அவர் தொடர்ந்து அவுட்டாகி வரலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Rinku Singh Poor Form

மீண்டும் பார்முக்கு வருவாரா ரிங்கு?..

இதற்கிடையே தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் முறையே 11, 9 மற்றும் 8 ரன்களை தான் ரிங்கு சிங் எடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் கடைசி ஏழு டி20 இன்னிங்ஸ்களில் 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ரிங்கு சிங். அவரது பேட்டிங் சராசரியும் 15 ஆக தான் உள்ளது.

அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 128 ஆக இருக்க பினிஷராக கருதப்படும் வீரரின் நிலைமை எப்படி இருக்கக்கூடாது என்றும் நிச்சயம் அவரது பேட்டிங்கில் உள்ள குறைகளை சரி செய்து வரும் நாட்களில் குறைந்து பந்துகளில் அதிக ரன்களை அடிப்பதற்கான முயற்சிகளை ரிங்கு சிங் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.