இதே 18 மே தான்.. 11 வருஷம் முன்னாடி சிஎஸ்கே – ஆர்சிபி ஆடிய கடைசி லீக் மேட்ச்.. ஜெயிச்சது யாரு தெரியுமா..

By Ajith V

Published:

சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கும் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் அவர்களுக்கு ஏமாற்றமாக தான் அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி இருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்தடுத்து சில வெற்றிகளையும் குறித்து அசத்தியிருந்தது. அதே வேளையில், முதல் போட்டியில் தோல்வியடைந்த ஆர்சிபி, அடுத்தடுத்த போட்டியில் தொடர்ந்து தோல்வியடைந்து மொத்தம் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அவர்களின் பிளே ஆப் பறிபோயிருக்கும் என அனைவரும் கருதிய நிலையில் தொடர்ச்சியாக ஐந்து போட்டியில் வெற்றி பெற்று தற்போது அதிரடியான ரூட்டையும் கையில் எடுத்துள்ளது ஆர்சிபி.

சென்னை மற்றும் ஆர்சிபி என இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில், அதில் வெற்றி பெறும் அணி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி இந்த சீசனில் சிறப்பாக ஆடினாலும் கடைசியில் சில போட்டிகளில் பந்து வீச்சும், தொடக்க பேட்டிங்கும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

இதனால் தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த காரணத்தினால் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் ரூட்டில் வாழ்வா சாவா என்ற நிலையில் தான் உள்ளனர். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறவும் சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற சூழலில்தான் பெங்களூரு அணியை சின்னசாமி ஸ்டேடியத்தில் மே 18ஆம் தேதி சந்திக்கிறது.

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி என இரு அணியிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், இப்படி ஒரு சமயத்தில் மோதினால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை சரியாக கணிப்பதே கடினமான ஒரு விஷயம் தான். ஆனால் அதே வேளையில் மே 18ஆம் தேதி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு மத்தியில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் சமயத்தில் பெங்களூரில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை வெளியாகி இருந்தது. இதனால் மிக எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற ரசிகர்களும் அஞ்சி வரும் நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக இதே போன்ற ஒரு நான் ஒரு போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்தது.

கடந்த 2013ம் ஆண்டு இதேபோல சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதி இருந்தது. இந்த போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட எட்டு ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 106 ரன்கள் எடுக்க, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 82 ரன்கள் மட்டுமே எடுக்க பெங்களூரு 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நாளை சனிக்கிழமை என்ற நிலையில், 2013 ஆம் ஆண்டு மழையால் தடைபட்டு நடந்த போட்டியும் சனிக்கிழமை நடந்ததுடன் ஆர்சிபி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.