அஸ்வின் – தோனி ஓய்வை அறிவிச்சதுக்கு நடுவே.. இவ்ளோ ஒற்றுமையான விஷயம் இருக்கா?..

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் ஆடி வரும் நிலையில் திடீரென அந்த அணியின் ஜாம்பவானாக கருதப்பட்டு வரும் அஸ்வின், தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது ரசிகர் மத்தியில் அதிக…

Ashwin and Dhoni Retirement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் டி வரும் நிலையில் திடீரென அந்த அணியின் ஜாம்பவானாக கருதப்பட்டு வரும் அஸ்வின், தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது ரசிகர் மத்தியில் அதிக வேதனையையும் ஏற்படுத்தி இருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான ஒரு தொடராக பார்டர் வாஸ்கர் டிராபி இருந்து வருகிறது.

இதில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு எளிதாக இருக்கும். அதே நேரத்தில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பலமாக தங்களது கம்பேக்கை கொடுத்திருந்தது.

ய்வை அறிவித்த அஸ்வின்

மூன்றாவது டெஸ்டிலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்க, மழை காரணமாக போட்டி டிராவில் முடிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு போட்டிகளை சுற்றி பல விறுவிறுப்பான அம்சங்கள் இருக்க திடீரென மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததும் தனது ஓய்வு முடிவையும் அறிவித்திருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக பல முக்கியமான தொடர்களை இழக்காமல் இருந்ததற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கும் மிகப்பெரியது. ந்து வீச்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்துள்ளார் அஸ்வின். மேலும் இந்திய அணி கண்ட மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களின் ஒருவரா ரவிச்சந்திரன் அஸ்வின் 600 விக்கெட்டுகளை தொட்ட பின்னர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

அஸ்வின், தோனி ஓய்வில் ஒற்றுமை

ஆனால் இந்த தொடருக்கு நடுவே அவர் இப்படி ஒரு முடிவை எடுத்தது ரசிகர்கள் பலனையும் வேதனை அடையவும் வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த வீரரான அஸ்வின், ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் மட்டும் தொடர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் அஸ்வின் அறிவித்த ஓய்வு முடிவுக்கும், தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற சமயத்திலும் இருந்த ஒற்றுமை தொடர்பான தகவல் ரசிகர்கள் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
Ashwin Retired from test

தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி முடிவடைந்ததும் டெஸ்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரங்கேறி இருந்த நிலையில் அஸ்வினும் அதே போல டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி முடிவடைந்ததற்கு பின்னர் தனது ஓய்வு முடிவையும் அறிவித்துள்ளார்.