பிட்ச் ரிப்போர்ட் யாருக்கு சாதகம்.. துபாயில் இன்று இறுதி போட்டி..!

  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. சாம்பியன்ஷிப் கிரிக்கெட்…

final

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் அதிகபட்ச வெற்றியுடன் இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது. இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வென்றுள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.

அதேபோல் நியூசிலாந்து அணியும் இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் துபாய் கிரிக்கெட் மைதானத்தின் பிச்சு குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது மெதுவான பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம் எனக் கருதப்படுகிறது. அதனால் ஸ்பின்னர்களுக்கு அதிக ஆதரவு இருக்கும்.
பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடினால், அதன் பின்னர் ஆதிக்கம் செலுத்த முடியும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தம் மிகுந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்வது சிறந்த தேர்வாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

துபாய் மைதானத்தில் இதுவரை 62 போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 23 முறை வெற்றியும், முதலில் பந்துவீசிய அணி 37 முறை வெற்றியும் பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் அதிகபட்ச 350 ரன்களும் குறைந்தபட்சமாக 91 ரன்களும் எடுக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை இந்த தொடரில் தோல்வியின்றி வெற்றி கண்டுள்ளது. இன்று ஒரே ஒரு வெற்றியையே பெற்றால், சாம்பியன் கோப்பையை கைப்பற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.