நேற்று வெஸ்ட்இண்டீஸை போட்ட போடு; தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பிளேஸ்!

தற்போது நம் இந்திய நாட்டில் மேற்கத்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 3 ஒருநாள் போட்டிக்கான தொடரை இந்திய அணி 3 க்கு 0 என்ற…

India West Indies Cricket 71 1644324813221 1644324845159

தற்போது நம் இந்திய நாட்டில் மேற்கத்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 3 ஒருநாள் போட்டிக்கான தொடரை இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் மேற்கத்திய அணியை வென்று தொடரை கைப்பற்றியது.

அதன்பின்னர் நடைபெற்ற 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் மேற்கத்திய அணிகளை வென்றது. குறிப்பாக நேற்றைய தினம் மூன்றாவது 20 ஓவர் போட்டி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய அணி வீரர்கள் மீண்டும் தங்களது பழைய நிலைமைக்கு வந்துள்ளது பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்தியா தனது முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு 20 20 ஓவர் போட்டி தரவரிசை பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன