இனி HELLO இல்லை YELLOW தான் CSK வீரர்கள் உடையில் மாற்றம் !!

பிரபலமான நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ஐபிஎல் கிரிக்கெட் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஐந்தாவது ஆண்டாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆசியாவில் முன்னணி மற்றும் பிரபல நிறுவனமான நிப்பான் பெயிண்ட் சென்னை சூப்பர்…

image 750x 62453fd5e99a7 1

பிரபலமான நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ஐபிஎல் கிரிக்கெட் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஐந்தாவது ஆண்டாக ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆசியாவில் முன்னணி மற்றும் பிரபல நிறுவனமான நிப்பான் பெயிண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரதாரராக மஞ்சள் வண்ணத்திலேயே நிப்பான் பெயிண்ட் CSK  YELLOW என்ற மஞ்சள் பெயின்ட் விற்பனை செய்து வருகிறது.

அதோடு மட்டும் இல்லாமல் சென்னை அணி வீரர்கள் உடுத்தும் சட்டையில் தோழ்பட்டையில் சிஎஸ்கே எல்லோ என்ற லோகோவும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்  சென்னை அணி வீரர்கள்  HELLO  என்று சொல்லாமல்  YELLOW  என்று சொல்வார்கள் நிப்பான் பெயிண்ட் தலைவர் மகேஷ் ஆனந்த் மற்றும்  துணைதலைவர் மார்க் டைட்டஸ் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிப்பான் பெயிண்ட் விளம்பரத்தில் ரவீந்திர ஜடஜா , ராபின் உத்தப்பா மற்றும் ப்ராவோ  போன்ற வீரர்கள் நடித்துள்ள விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன