பிளே ஆப்ஸ் போகாட்டி என்ன.. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியாலும் முடியாததை.. 2 முறை நிகழ்த்திக் காட்டிய மும்பை..

Published:

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றுவதற்கு வழக்கமாக வைத்திருந்த இரண்டு அணிகள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். ஆனால், இந்த இரண்டு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. ஆனாலும், அடுத்த சீசனில் நிச்சயம் அவர்கள் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால், அதன் பின்னர் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. அதைவிட முக்கியமாக ஒருமுறை கூட அவர்கள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது கிடையாது. இதில் 2023 ஆம் ஆண்டு நடந்த சீசனில், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை நூலிழையில் கோட்டை விட்டிருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல இறுதி போட்டிக்கு முன்னேறுவதும், கோப்பையை கைப்பற்றுவதும் வாடிக்கையாக வைத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அந்த அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல அதிரடி வீரர்கள் இருந்தபோதிலும் அணியில் உள்ள சில குழப்பங்களால் லீக் சுற்றுடன் வெளியேறி வருகிறார்கள் என்றும் தெரிகிறது.

இப்படி நான்கு ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் மும்பை இந்தியன்ஸ் சந்தித்து வரும் நிலையில் நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறும் சீசனில் இவற்றிற்கெல்லாம் விடை தெரிவித்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பதும் அந்த அணியின் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றது.

இதில் குவாலிஃபயர் 1 போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத, எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறுவது யார் என்பது பற்றி பலவிதமான கணிப்புகளையும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்து வரும் அதே வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான சாதனை ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கடந்த 2013 மற்றும் 2017 ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் கைப்பற்றி இருந்தது. இந்த இரண்டு சீசன்களிலும் குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்திருந்த மும்பை அணி, அதன் பின்னர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கோப்பையை வென்று சாதனை புரிந்திருந்தது. இந்த நிலையில் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை கைப்பற்றிய ஒரே அணி என்ற பெருமையும் மும்பை வசம் மட்டும் உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த பெருமையுடன் மும்பை அணி வலம் வரும் சூழலில், எந்த அணிகளும் குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை கைப்பற்றியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...