அஸ்வினை மாதிரியே.. 2024 ல் ஓய்வு முடிவை எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்.. முழு விவரம்..

திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இந்திய கிரிக்கெட் அணி எப்படி ஒரு டெஸ்ட் அணியை…

Retired Indian Cricket Players 2024

திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இந்திய கிரிக்கெட் அணி எப்படி ஒரு டெஸ்ட் அணியை தேர்வு செய்தாலும் அதில் அஸ்வினுக்கு நிச்சயம் மிக முக்கியமான ஒரு இடம் இருக்கும்.

அவர் இந்திய மண்ணில் மட்டும்தான் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்றும் வெளிநாட்டு மண்ணில் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை என்றும் ஒரு விமர்சனம் இருந்து கொண்டே தான் வருகிறது. ஆனால் இந்திய அணி தங்கள் சொந்த மண்ணில் கடந்த 12 ஆண்டுகளாக எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காமல் வெற்றிகளை மட்டுமே பெற்று வந்ததற்கு அஸ்வின் பங்கை வெறும் வார்த்தைகளால் விரித்து விட முடியாது.

அஸ்வின் என்னும் ஜாம்பவான்

அதே போல வெளிநாட்டு மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட் எடுப்பதற்கு இணையாக பேட்டிங்கிலும் பல முறை நெருக்கடியில் தவித்த இந்திய அணியை தனியாளாகவும் மீட்டெடுத்துள்ளார் அஸ்வின். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைத் தாண்டி டெஸ்ட் அரங்கில் அஸ்வினின் பங்களிப்பு கடந்த 15 ஆண்டுகளில் மிகப்பெரிதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்காத நிலையில் இரண்டாவது போட்டியில் தேர்வாகி இருந்தார்.
Ashwin Retirement in Intl

தொடர்ந்து மூன்றாவது போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இடம்பெற்றிருந்த நிலையில் இந்த போட்டியும் டிராவில் முடிந்திருந்தது. இதற்கு மத்தியில் டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இரண்டு போட்டிகள் மீதமிருக்க, தற்போது அஸ்வின் அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மிக எமோஷனலாகவும் அறிவித்திருந்தார். அவரது முடிவு இந்திய அணியில் இருந்த பலருக்குமே ஒருவித வேதனையை அளித்திருக்க, ரசிகர்களும் இது பற்றி சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஓய்வு முடிவை எடுத்த வீரர்கள்

இதனுடைய 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ள நிலையில், அஸ்வினை போல ஓய்வு முடிவு எடுத்த இந்திய வீரர்களை பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. அந்தத் தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருந்தனர்.
Dhawan and Karthik

இதனைத் தொடர்ந்து சிகர் தவான் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை எடுக்க அவருக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவிக்க அவர் தொடர்ந்து டிஎன்பிஎல், ரஞ்சித் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.