இதுதான் கடைசி போட்டி.. மகளிடம் சொன்ன தோனியின் மனைவி சாக்சி? ‘தல’ விடைபெறுகிறாரா?

  நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில், சென்னை அணி தோல்வி அடைந்த நிலையில், தோனி ஓய்வு பெற போகிறார் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை உறுதி செய்வதுபோல்,…

dhoni wife

 

நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில், சென்னை அணி தோல்வி அடைந்த நிலையில், தோனி ஓய்வு பெற போகிறார் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை உறுதி செய்வதுபோல், நேற்றைய போட்டியை நேரில் காண வந்திருந்த தோனியின் மனைவி சாக்ஷி, தனது மகளிடம் “கடைசி போட்டி” என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், நேற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து போட்டியை காண வந்தனர். இது, அவரது மகனின் கடைசி போட்டி என்பதைக் கருத்தில் கொண்டு அவர்கள் வந்திருக்கலாம் என்றொரு வாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நேற்றைய போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்படுவது ஒரு பக்கம் அவரது ரசிகர்களுக்கு கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி ஜெயிக்க வேண்டுமென்றால் இளம் வீரர்களை கலந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை நேரில் பார்த்த சாக்ஷி, தனது மகள் ஜீவாவிடம் “லாஸ்ட் மேட்ச்” என்று கூறும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. எனவே, தோனி ஓய்வு பெறுவார் என்றாலும், இந்த சீசன் முடிந்தவுடன் தான் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டார் என்றும், அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் இரண்டு தோல்விகள் சென்னை மைதானத்திலேயே நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முடிவுகள் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இளம் வீரர்களை களமிறக்கினால் மட்டுமே இனி தொடர்ச்சியான வெற்றிகளை பெற முடியும் என்று ரசிகர்களின் ஆதங்கம், தோனியை மறைமுகமாக ஓய்வு பெறச் சொல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.