நேற்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டம் ஆனது இறுதிப் போட்டிக்கு செல்லும் அணியை நிர்ணயிக்கும் ஆட்டமாக காணப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 188 ரன்களை அடித்து இருந்தது. இதனால் 189 ரன்கள் அடித்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற முனைப்போடு குஜராத் அணி வீரர்கள் களமிறங்கினர்.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இருந்தபோது தென்ஆப்பிரிக்கா அணி வீரர் டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து அணியை பைனலுக்கு இழுத்து சென்றார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செமி -பைனலுக்கு நேரடியாக சென்று விட்டது. இந்த நிலையில் இன்றைய ஆட்டம் எந்த அணி செமி பைனலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யோடு மோதும் என்பது போல் காணப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக செமி-பைனலுக்கு நேரடியாக சென்று விடும் தோல்வி பெரும் அணியோ எலிமினேட் ஆகி வெளியேறி செல்லும்.
இந்த இக்கட்டான போட்டியில் இன்று லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் மூன்று, நான்கு இடங்களில் உள்ள இந்த இரண்டு அணிகளும் இன்றைய தினம் இரவு 07:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது