1983ல் கபில்தேவ் கேட்ச்.. 2023ல் டிராவிஸ் கேட்ச்.. திருப்புமுனையை ஏற்படுத்துமா?

By Bala Siva

Published:

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற போது இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், விவியின் ரிச்சர்ட்ஸ் கேட்சை நீண்ட தூரம் ஓடிப்போய் பிடித்தார். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கேட்சை தான் இன்று ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெல்லவே முடியாது என்ற நினைத்துக் கொண்டிருந்த மேட்சில் மேற்கிந்திய தீவின் விவியன் ரிச்சர்ட்ஸ் சூப்பராக அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் 33 ரன்கள் அடித்தபோது ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அந்த கேட்சை நீண்ட தூரம் பின்னால் ஓடி டைவ் அடித்து கபில்தேவ் பிடித்தார். அந்த கேட்ச் தான் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்றைய உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா கொடுத்த கேட்சை நீண்ட தூரம் பின்னாலே ஓடி டிராவிஸ் ஹெட் கேட்ச் பிடித்துள்ளார். கபில்தேவுக்கு இணையான ஒரு கேட்சை இன்று டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளது ஒரு பெரிய திருப்புமுனையாக ஆஸ்திரேலியா அணிக்கு மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.