10 வருசத்துல இப்படி நடந்ததே இல்லையா.. ஜெய்ஸ்வால், படிக்கல் விக்கெட்டால் இந்திய அணி சந்தித்த அவமானம்..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முன்பாக என்னென்ன விஷயங்களை எதிர்பார்த்து காத்திருந்தார்களோ அவை அனைத்துமே தற்போது தலைகீழாக மாறி அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. பெர்த் மைதானத்தில் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடியுள்ள நிலையில், கடந்த 2008 ஆம் நடந்த போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.

மற்ற நான்கு முறையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி, இந்த முறை நிறைய இளம் வீரர்களைக் கொண்டு நிச்சியம் சாதிக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். ஆனால் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்த நிலையில் 150 ரன்களுக்கு ல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளது.

கவனம் ஈர்த்த நிதிஷ் ரெட்டி

அதிலும் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் கலக்கும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டக் அவுட்டாகி இருந்தார். அவரின் தொடர்ந்து மூன்றாவது வீரராக வந்த தேவ்தத் படிக்கல்லும் டக் அவுட்டாக அடுத்து வந்த கோலி 5 ரன்களிலும் ஆஸ்திரேலிய மண்ணில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரேல் 11 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர்.
Nitish Kumar Reddy

ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த் மற்றும் அறிமுக வீரர் நிதிஷ் ரெட்டி இணைந்து ஓரளவுக்கு இந்திய அணியின் ஸ்கோரை மீட்டெடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் பந்த் 37 ரன்களில் அவுட்டாக, வரிசையாக வீரர்கள் அவுட்டாக தொடங்கி விட்டனர். மேலும் கடைசி விக்கெட்டா நிதிஷ் ரெட்டி 41 ரன்களில் அவுட்டாகி இருந்தார். 50 து ஓவரில் இந்திய அணி 150 ரன்களில் ல் அவுட்டாக, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சிலேயே அதிக ரன்களை நிதிஷ் ரெட்டி பெற்றிருந்தது கவனம் ஈர்த்திருந்தது.

அவமானத்தை சந்தித்த இந்திய அணி

அப்படி ஒரு சூழலில், நிதிஷ் ரெட்டியை போல அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டானதால் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் அரங்கில் மிக மோசமா அவமானத்தை பெற்றுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மாஞ்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் இந்திய அணியின் முதல் 3 வீரர்களில் இரண்டு பேர் டக் அவுட்டாகி இருந்தனர்.
Australia Cricket

அதன் பின்னர், முதல் மூன்று பேரில் எந்த இரண்டு இந்திய வீரர்களும் டக் அவுட்டாகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தான், ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் டக் அவுட்டானதால் இந்திய அணி மோசமான பெயரை 10 ஆண்டுகளுக்கு பிறகு சம்பாதித்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது.