ஐபிஎல் விளையாட எந்த நாடும் வீரர்களை அனுப்பாதீர்கள்.. இன்சமாம் உல் ஹக் ஆவேசம்

  ஐபிஎல் தொடரில் விளையாட உலகம் முழுவதுமிருந்தும் கிரிக்கெட் அணிகள் தங்களுடைய வீரர்களை அனுப்புகிறார்கள். ஆனால், பி.சி.சி.ஐ. இந்திய வீரர்களை வேறு எந்த தொடரிலும் விளையாட அனுப்புவதில்லை. அதனால், உலகம் முழுவதும் உள்ள நாடுகள்…

inzamam

 

ஐபிஎல் தொடரில் விளையாட உலகம் முழுவதுமிருந்தும் கிரிக்கெட் அணிகள் தங்களுடைய வீரர்களை அனுப்புகிறார்கள். ஆனால், பி.சி.சி.ஐ. இந்திய வீரர்களை வேறு எந்த தொடரிலும் விளையாட அனுப்புவதில்லை. அதனால், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்களது வீரர்களை ஐபிஎல் விளையாட அனுப்பாதீர்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ஒரு செய்தி நிறுவனத்துக்கு இன்சமாம் பேட்டி அளித்தபோது, “சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் விளையாட பாகிஸ்தான் வர முடியாது என்று இந்தியா சொல்வதை தள்ளிப் போடலாம், அது பரவாயில்லை. ஆனால், உலகம் முழுவதும் மிகச் சிறந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர். ஆனால், இந்திய வீரர்கள் மற்ற எந்த லீக்கிலும் விளையாட அனுமதிக்கப்படவில்லை.

அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஐபிஎலில் தங்கள் வீரர்களை விளையாட அனுப்புவதை நிறுத்த வேண்டும். நீங்கள் உங்கள் வீரர்களை எந்த லீக்கிலும் அனுப்பவில்லை என்றால், மற்ற கிரிக்கெட் வாரியங்களும் அதற்கு ஏற்ற முடிவு எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ. ஒப்பந்த விதிமுறைகளின்படி, இந்திய வீரர்கள் பிற அணிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிற லீக்குகளில் விளையாடலாம்.

குறிப்பாக, தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற பிறகு SA20 லீக்கில் விளையாடினார். அதேபோல், யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களும் கனடா மற்றும் இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடினர். ஆனால், ஓய்வு பெற்ற பின்னரே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிற அணிகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இதைத்தான் வின்ஸமாம் உல் ஹக் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

மற்ற அனைத்து அணிகளும் தங்களுடைய வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கும்போது, இந்திய வீரர்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்ற இன்சமாம் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.