பர்படாஸ் : ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஐசிசி உலகக் கோப்பையை தனது வசமாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. கபில்தேவ், மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவிற்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டனாக வெற்றி வாகை சூடியிருக்கிறார் ரோஹித் சர்மா. T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க அணியை எதிர் கொண்டது இந்திய அணி.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 176 ரன்களைச் சேர்த்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துரத்திய தென்ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தையே கொடுத்தது. இந்நிலையில் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கித் துரத்த ஆரம்பித்தது தென் ஆப்பிரிக்க அணி. இருநாட்டு ரசிகர்களையும் நகம்கடிக்க வைத்து, சீட்டின் நுனியில் உட்கார வைத்த இந்த கடைசி ஓவரை ஹிர்திக் பாண்ட்யா வீசினார்.
2014 மேட்ச்ல நடந்ததே தான்.. 10 வருஷம் கடந்தாலும் கொஞ்சம் கூட மாறாத கோலியின் பேட்டிங்..
முதல் பந்தே விக்கெட் விழ இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் இரண்டாவது பந்து பவுண்டரிக்கு செல்ல சற்று அதிர்ச்சியாகினர் இந்திய அணி ரசிகர்கள். உச்ச கட்ட டென்ஷனில் அடுத்த இரண்டு பந்துகளை வீச இரண்டும் தலா 1 ரன் எடுக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் மைதனாம் அதிரத் தொடங்கியது. ஐந்தாவது பந்தில் விக்கெட் விழ, ஆறாவது பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணி வீரர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.
நாடே இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை சி.இ.ஓ-வான சுந்தர் பிச்சை இந்திய அணியின் ஆட்டத்தை வர்ணித்துள்ளார். அவர் கூறுகையில், என்ன ஒரு ஆட்டம்.. சிறிது நேரத்தில் எனது மூச்சே நின்றுவிட்டதாகக்” கூறியிருக்கிறார். இவரைப் போலவே பல்வேறு பிரபலங்களும் இந்திய அணிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.