நேற்றைய தினம் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் அதிதீவிரமாக நடைபெற்றது. நேற்றைய முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிய விளையாடுவதோடு மட்டுமில்லாமல் தமிழர்களின் கலாச்சார மற்றும் உணவுகளை வெளிநாட்டவர்கள் ரசித்து கொண்டு வருகின்றனர். பலரும் இதனை டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் ஆட்டத்தில் இந்தியாவிற்கு தொடக்க முதலே வெற்றி புள்ளிகள் கிடைத்தது. இந்த நிலையில் இந்த வெற்றிப் புள்ளி ஆனது இன்றைய தினமும் தொடர்வதாக தெரிகிறது.
ஏனென்றால் இன்றைய தினம் இந்தியாவின் வீராங்கனை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடரில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் நந்திதா வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் இந்தியா சி அணியில் இடம் பெற்றிருந்த நந்திதா சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தி வெற்றியினை பெற்றுள்ளார். மகளிர் பிரிவில் இந்திய சி அணியில் இடம் பெற்று இருந்த இந்தியாவின் கர்வாடை வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.