45 வருசம்.. சிட்னி மைதானத்துல இத்தனை தடங்கல் இருக்கா.. இந்திய அணிக்கு வந்த சோகம்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சிட்னி மைதானத்தில் மோத உள்ள நிலையில் அங்கே இந்திய அணிக்கு உள்ள சில சிக்கல்கள் பற்றிய தகவல்கள் அனைவரையும் வருந்தி போக வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான…

India vs Australia in Sydney

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சிட்னி மைதானத்தில் மோத உள்ள நிலையில் அங்கே இந்திய அணிக்கு உள்ள சில சிக்கல்கள் பற்றிய தகவல்கள் அனைவரையும் வருந்தி போக வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாகவே இந்திய அணியில் ஏராளாமான குழப்பங்கள் இருந்து வந்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவிலேயே டெஸ்ட் தொடரை இழந்து நின்ற போது ரோஹித்தின் கேப்டன்சி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல், ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே பேட்டிங்கில் ரன் சேர்க்க முடியாமல் திணற இளம் வீரர்கள் மட்டும் தான் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகள் அணியில் நிலவி இருந்தது.

பரிதாப நிலை

ரோஹித் முதல் டெஸ்டில் இல்லாமல் போக, பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த டெஸ்டின் 2 வது இன்னிங்சில் கோலி சதமடித்திருந்தார். ஆனால் இதன் பின்னர் மொத்தமாக 4 டெஸ்ட்கள் முடிந்தும் மற்ற எந்த இன்னிங்சிலும் ரன் சேர்க்க முடியவில்லை. இவரை போலவே, ரோஹித்தும் 10 ரன்கள் தாண்டவே சிரமப்பட்டு வர, இந்திய அணியின் நிலைமையும் பரிதாபமாக உள்ளது.

இதற்கிடையே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த மைதானத்தில் இந்திய அணியில் நிலை பற்றிய புள்ளி விவரங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

சிட்னி மைதான பரிதாபங்கள்

கடந்த 45 ஆண்டுகளில் இந்திய அணி ஒருமுறை கூட சிட்னி மைதானத்தில் ஆடிய டெஸ்டில் வென்றதே கிடையாது. இதைத் தாண்டி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய டெஸ்ட் தொடரின் 5 வது போட்டியில் ஒரு முறை கூட அவர்கள் வென்றதில்லை. இப்படி இந்திய அணியை தாண்டி சில ஆஸ்திரேலிய வீரர்கள் சிட்னி மைதானத்தில் வைத்துள்ள சாதனைகளும் இந்திய ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

சிட்னி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 100 ஆக உள்ளது. இவரை போல, சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கவாஜா 104 சராசரியை வைத்துள்ள சூழலில், மார்னஸ் லம்புசேனின் சராசரியும் அதே மைதானத்தில் 81.55 ஆக உள்ளது.

இப்படி சிட்னி மைதானத்தில் எந்த புள்ளி விவரங்களும் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.