டெஸ்ட் அரங்கில் சரித்திரம்.. இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய போட்டியில்.. பதிவான வரலாற்று சம்பவம்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதியிருந்த நிலையில் இதில் மிக முக்கியமான ஒரு சரித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அது என்ன என்பது பற்றியும் இந்தியா…

Ind vs Aus Low Ball Test

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதியிருந்த நிலையில் இதில் மிக முக்கியமான ஒரு சரித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அது என்ன என்பது பற்றியும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எப்படி காரணமாக இருந்தார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணியில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் இரண்டு போட்டியின் முடிவில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியும் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த இரண்டு முறையும் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைத்திருந்த இந்திய கிரிக்கெட் அணி, இந்த முறை கொஞ்சம் தடுமாற்றத்தை கண்டு வருகிறார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. முதல் டெஸ்டில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றத்தைக் கண்டிருந்தாலும் பந்து வீச்சில் சரியான கம்பேக் கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செக் வைத்திருந்தது.

திணறிய இந்திய அணி

பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா என இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்த்து சொந்த மண்ணிலேயே ஆட முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அவதிப்பட்டனர். இதனால் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாதனை புரிந்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டி என்பதே பெரிய சவாலாக அமைந்தது.
India Loss vs Aus

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஒரே ஒருமுறை தான் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் அடிலைடு மைதானத்தில் ஆடியிருந்த ஏழு பகலிரவு போட்டிகளிலும் தொடர்ச்சியாக அவர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில் எட்டாவது போட்டியில் இந்தியாவை எதிர்த்து களமிறங்கினர். முதல் டெஸ்டை போலவே இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்ஸில் மோசமாக பேட்டிங் செய்து 180 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. சீனியர் வீரர்கள் சொதப்பல், ஸ்டார்க்கின் பந்து வீச்சு என பல காரணங்கள் இருந்ததால் இந்திய அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சரித்திர சம்பவம்..

தொடர்ந்து தங்களின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் எடுக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் 19 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழக்காமல் எளிதாக வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்வியால் இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்திருந்த நிலையில் மீதமிருக்கும் மூன்று டெஸ்டிலும் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
Ind vs Aus 2nd Test

இதற்கிடையே தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்டில் முக்கியமான ஒரு போட்டியாக இது மாறி உள்ளது. இந்த போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வந்திருந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியிலேயே குறைந்த பந்துகள் வீசப்பட்ட ஒரு போட்டியாகவும் கிரிக்கெட் சரித்திரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.