காமன்வெல்த் போட்டியில் இதுவரை ஐந்து பதக்கங்கள்-அசத்தும் இந்தியா;

By Vetri P

Published:

நம் தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இதே சமயத்தில் இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி சுவாரசியமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

நேற்றைய தினம் முதல் இந்தியாவிற்கு தொடர்ந்து தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்றும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதக்கங்களானது இன்றைய தினமும் தொடர்வதாக தெரிகிறது. ஏனென்றால் இன்றைய தினம் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் காமன்வெல்த் போட்டியில் கிடைத்துள்ளது.

அதன்படி பழுதூக்குதல் 67 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் ஜெரிமி லால்ரினுங்கா. கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடையும், ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ என மொத்தம் 300 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் என்றார் ஜெர்மி .

இதனால் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி ஒரு வெண்கல பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது வீரர் ஜெரிமி லால் ரினுங்கா இந்தியாவின் தங்கமகன் ஆனார்.

 

Leave a Comment