சிஎஸ்கேவுக்கு நிகரா இந்திய கிரிக்கெட் அணி செஞ்ச சம்பவம்.. டி20-ல வரலாறு படைச்சுட்டாங்க..

By Ajith V

Published:

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த சாதனை ஒன்றிற்கு நிகராக தற்போது இந்திய கிரிக்கெட் அணியும் டி20 கிரிக்கெட்டில் படைத்த முக்கியமான சாதனை பற்றி தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே அனைத்து போட்டிகளிலும் பேட்டிங் அதிரடி மட்டும் தான் ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

மிக அரிதாகவே சில போட்டிகளின் பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருந்து குறைந்த ரன்களையும் சில அணிகள் எடுக்கிறது. மற்ற போட்டிகளில் எல்லாம் சிக்ஸர்கள், ஃபோர்கள் என ஓவருக்கு ஓவர் பறப்பதால் ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதிரடி வாணவேடிக்கை என மாறி விட்டது. அதுவும் சில போட்டிகளில் 200 ரன்கள் எடுத்தாலே அதை அணிகள் எளிதாக துரத்தி பிடிக்கும் நிலையும் உருவாகி விட்டது.

அப்படி ஒரு சூழலில், தோனி தலைமையில் கடந்த ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் ஆடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிறைய சாதனைகளை படைத்துள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் தலைமையில் களமிறங்கி இருந்தது.

ஆரம்ப லீக் போட்டிகளில் சிறப்பாக அவர்கள் ஆடி இருந்தாலும் கடைசி கட்டத்தில் சில தோல்விகளால் பிளே ஆப் வாய்ப்பையும் இழந்திருந்தனர். இருந்தாலும் அடுத்த ஆண்டில் நிச்சயம் அவர்கள் சிறந்த கம்பேக்கை கொடுத்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பதும் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை ஐபிஎல் தொடரில் முன்னேறி உள்ள அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்கும் சூழலில், அவர்களுக்கு நிகராக இந்திய கிரிக்கெட் அணியும் டி20 அரங்கில் புதிய வரலாறு படைத்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளை போல இல்லாமல், டி20 சர்வதேச போட்டிகளில் 200 ரன்கள் எடுப்பது என்பதே சற்று அரிதான காரியம் தான். ஐபிஎல் போல விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக இல்லை என்பதால் 200 ரன்களை எட்டினாலே அது நிச்சயம் பெரிய இலக்கு தான். அப்படி இருக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் 35 முறை 200 ரன்களை எட்டி உள்ளது.

சர்வதேச போட்டிகள் இல்லாமல் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்களை தொட்ட அணி என்ற பெருமையுடன் சிஎஸ்கே தான் விளங்கி வந்தது. இந்த நிலையில் தான், இலங்கை அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இந்திய அணி 200 ரன்களை கடந்ததன் மூலம் அவர்களும் 35 வது முறையாக 200 ரன்களை அடித்த அணி என்ற சிஎஸ்கேவின் சாதனையையும் சமன் செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக இந்திய அணி எளிதாக முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.