ரோஹித் டெஸ்ட்ல ஓய்வை அறிவிச்சா.. இப்டி ஒரு மோசமான பேரு கிடைக்குமா.. ரசிகர்களை ஏங்க வைத்த விவரம்..

Rohit Sharma : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்திய அணியை…

Rohit Retirement in Test

Rohit Sharma : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்திய அணியை சுற்றி பல்வேறு பரபரப்பான தகவல்களும் கடந்த சில மணி நேரங்களில் வெளியான வண்ணம் உள்ளது. இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த மூன்று தொடர்களாக சிறப்பான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தாமல் இருப்பதுடன் கேப்டன்சியிலும் கோட்டை விட்டு வருகிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ரா தலைமையில் இந்திய அணி முதல் டெஸ்டை வென்றிருந்தது. ஆனால் ரோகித் சர்மா திரும்ப வந்த பின்னர் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவரது தலைமையில் இரண்டில் தோல்வி அடைந்த இந்திய அணி ஒன்றில் டிரா செய்திருந்தது. கேப்டன்சி மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டிலும் டெஸ்ட் அரங்கில் கோட்டை விட்டு வரும் ரோஹித் ஷர்மா, இந்த தொடரில் 3 போட்டிகள் ஆடி 31 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோஹித், ஐந்தாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்றும் அப்படி ஆடினாலும் அத்துடன் ஓய்வு பெற்று விடுவார் என்றும் தகவல் வெளியானது. அதே போல, தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கும் இந்திய அணிக்கும் இடையே மோதல் இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்திருந்த கம்பீர், எனக்கும் வீரர்களுக்கும் இடையேயான விஷயம் டிரெஸ்ஸிங் ரூமுக்குள் மட்டும் தான் தெரிய வேண்டும் என கூறி இருந்தார். இதே போல, ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் ஆடுவது பற்றியும் கம்பீர் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. இதனிடையே, ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் ஆடமாட்டார் என்றும், பும்ரா தான் இந்திய அணியை வழிநடத்த உள்ளார் என்றும் கூட தகவல் வெளியானது.

அப்படி ஒரு சூழலில், ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 வது டெஸ்டில் ஆடாமல் போய் இத்துடன் டெஸ்ட் அரங்கில் ஓய்வினை அறிவித்தால் எந்த இந்திய வீரரும் சந்திக்காத ஒரு அவமானத்தை அவர் சந்திக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 120 ரன்கள் மட்டும் தான் அடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.
Rohit out in Sydney Test

இந்திய வீரர்களில் டெஸ்ட் அரங்கில் 3000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ள எந்த வீரரும் கடைசி 10 இன்னிங்ஸ்களில் இவ்வளவு குறைவான ஸ்கோரை அடித்தது கிடையாது. டெஸ்டில் 4,301 ரன்களை சேர்த்துள்ள ரோஹித் இத்துடன் ஓய்வினை அறிவித்தால் அப்படி ஒரு மோசமான பெயரை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.