இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, 43 வயதிலும் தோனி இன்னும் பந்தயத்தில் இருக்கிறார். தோனி இதுவரை RCBக்கு எதிராக 47 சிக்ஸர்கள் விளாசியுள்ளார், இது IPL வரலாற்றில் எந்தவொரு பேட்ஸ்மேனும் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட மிக அதிகமான சிக்ஸர்களாகும். இன்று இரவு நடைபெறும் போட்டியில் மேலும் மூன்று சிக்ஸர்கள் அடித்தால், ஒரு ஐபிஎல் அணிக்கு எதிராக 50 சிக்ஸர்கள் அடிக்கும் முதல் வீரராக வரலாறு படைப்பார்.
IPL வரலாற்றில் RCBக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
எம்.எஸ். தோனி – 47
டேவிட் வார்னர் – 44
ரஸல் – 38
கே.எல். ராகுல் – 37
ரோஹித் சர்மா – 37
மேலும் தோனி தற்போது T20 கிரிக்கெட்டில் 338 சிக்ஸர்கள் அடித்துள்ளார். IPL 2025 தொடரில் மேலும் 12 சிக்ஸர்கள் அடித்தால், 350 சிக்ஸ்கள் அடிக்கும் மூன்றாவது இந்திய வீரராக அவர் விளங்குவார். இதற்கு முன்னர் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
T20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர்களின் அதிக சிக்ஸர்கள்:
ரோஹித் சர்மா – 525
விராட் கோஹ்லி – 419
சூர்யகுமார் யாதவ் – 343
சஞ்சு சாம்சன் – 341
எம்.எஸ். தோனி – 338