வார்னரை விட்டுட்டு பூரானை புடித்த ஹைதராபாத்! என்ன ஆகப்போகுதோ சன்ரைசர்ஸ்?

By Vetri P

Published:

இன்று காலை பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் 2022 ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் முதல் வீரராக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் களமிறக்கப்பட்டார்.

அதன் பின்னர் வரிசையாக இந்திய அணி வீரர்களின் ஆதிக்கமே காணப்பட்டது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான டுப்லஸ்ஸிஸ் இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஒரு சில வீரர்களை தங்களது அணியே தக்கவைத்துக்கொள்வது கொண்டுள்ளது. குறிப்பாக மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பிராவோவை இந்த ஆண்டு மீண்டும் சிஎஸ்கே தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் மற்றுமொரு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரான் ரூபாய் 10.75 கோடிக்கு விற்பனையாகி உள்ளார்.

இவரை 10.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. அடிப்படை விலையாக 1.50 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். இவர் இதற்கு முன்னதாக பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணியில் விளையாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment