ஐபிஎல் தொடரிலிருந்து கடைசி நேரத்தில் அவர் விலகியதற்காக பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் ஒரு வீரர் விலகுவது அந்த அணிக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக ஹாரி புரூக் 4 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட நிலையிலும், திடீரென அந்த அணியிலிருந்து விலகினார். அதேபோல், தற்போது டெல்லி அணிக்காக 6.25 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியில், பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட தடை விதித்துள்ளது.
இந்த முடிவை முன்னாள் சிஎஸ்கே வீரர் மொயின் அலி ஆதரவு தெரிவித்துள்ளார். “பிசிசிஐயின் முடிவு கடினமானது என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், சில வீரர்கள் இதை வேண்டுமென்றே செய்கிறார்கள். காயம் மற்றும் உடல் நிலை, குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு வீரர் அணியிலிருந்து விலகினால் அதற்கு விலக்கு அளிக்கலாம். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து ஒருவர் விலகினால், அந்த அணி மீண்டும் திட்டமிட வேண்டிய நிலை ஏற்படும். பெரும் குழப்பமும் உருவாகும். இதுகுறித்து பிசிசிஐ ஏற்கனவே விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளை மீறி அணியிலிருந்து திடீரென விலகுவது முறையல்ல. எனவே, பிசிசிஐ எடுத்த முடிவு சரிதான்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.