குஜராத் விஷயத்தில் ரெய்னாவை மிஞ்சிய பாண்டியா! எல்லாத்திலும் டாப்பு டக்கரு தான்!!

By Vetri P

Published:

நம் இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று நிறைவு பகுதிக்கு வந்துள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றன.

ஐபிஎல்

அதிலும் புதிதாக களமிறங்கிய குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளும் தகுதி சுற்றுக்கு தகுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் குஜராத்  நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியானது.

 

மேலும் rr vs gtநேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதியானது. இந்த நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர நாயகனாக ஜொலித்துக் கொண்டு வருகிறார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

Hardik Pandya PTI scaled 2

அவர் கடந்த சில மாதங்களாக முதுகுப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். இருப்பினும் கூட குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக அறிவித்தது.

பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் சரித்திரத்தை மாற்றும் பொறுப்பு ஹர்திக் பாண்டியா கையில் காணப்படுவதாக தெரிகிறது.

ஏனென்றால் இதற்கு முன்பு 2016,2017  ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் என்ற அணி விளையாடியது. இதில் கேப்டனாக இருந்தார் சுரேஷ் ரெய்னா. அவரும் ஒரு ஆல்ரவுண்டர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிதாக வந்த குஜராத்தில் ஆரம்பத்திலேயே செமி பைனல் வரை சென்றதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தற்போதைய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை இறுதி சுற்றுக்கு இழுத்துச் சென்றுள்ளார். மேலும் கோப்பையை வெல்வார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் ஏக்கத்தோடு காத்துக் கொண்டுள்ளனர்.

Leave a Comment