கிரிக்கெட் அரங்கில் அஸ்வின் எடுத்த முடிவு.. ஒரு மாதம் முன்பே கணித்த ரசிகர்.. உறைந்து போன நெட்டிசன்கள்..

Ravichandran Ashwin : கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. ஆனால் அதே நேரத்தில்…

Ashwin retirement prediction

Ravichandran Ashwin : கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. ஆனால் அதே நேரத்தில் மற்ற பல தொடர்களில் இந்திய அணி கோட்டை விட்ட விஷயங்கள் இந்திய ரசிகர்களுக்கே சோதனையாக அமைந்திருந்தது.

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்திருந்த இந்திய அணி இலங்கைக்கு எதிராகவும் ஒரு நாள் தொடரை ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணிற்கும் இந்திய அணி சமீபத்தில் சென்று பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை ஆடி முடித்திருந்தது. கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை சொந்தமாக்கி இருந்த இந்திய அணியால் இந்த முறை 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் பறிகொடுத்தது. அதுமட்டுமில்லாமல் ரோகித் மற்றும் விராட் கோலி என இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களான இருவருமே இந்த வருடத்தில் பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க முடியாமல் திணறி இருந்தனர்.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் அவர்கள் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலே இந்திய அணி தொடரை வென்றிருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென இந்திய அணி கண்ட சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச அரங்கில் இருந்து தனது ஓய்வு முடிவையும் அறிவித்திருந்தார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததும் மற்ற டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளாத அஸ்வின் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவிக்க இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனையாக அமைந்திருந்தது. அஸ்வின் திடீரென இந்த முடிவை எடுத்தது ரசிகர்களுக்கே பெரிய ட்விஸ்டாக இருக்க ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாகவே இதை ஒரு ரசிகர் கணித்து விட்டார் என்பது தான் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ashwin in test

Absy என்ற நபர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பாக இந்த தொடர் பற்றிய உங்களின் கணிப்புகளை தெரிவியுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் அஸ்வின் இந்த தொடருக்கு நடுவே தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒருவர் ஓய்வு பெறுவார் என்றால் தொடர் முடிந்து அந்த முடிவை எடுப்பார்.
ashwin fan prediction

ஆனால் தொடரின் நடுவிலே இந்த முடிவை அஸ்வின் எடுப்பார் என அந்த ரசிகர் கணித்தது தான் அனைவரையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளது. இதனை ஒரு பக்கம் பலரும் வியந்து பார்க்க, இன்னொரு புறம் இந்த பதிவை பார்த்து விட்டு அஸ்வின் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.