இந்திய கிரிக்கெட் அணியை கண்டு உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு அணிகளும் அஞ்சும் நிலையில் காணப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவில் உள்ள வீரர்கள் அனைவரும் திறமை வாய்ந்தவர்களாக காணப்படுகிறார்கள்.
அவர்களை தேர்ந்தெடுக்கும் விதமாக சையது முஷ்டாக் அலி தொடர், இந்தியன் பிரீமியர் லீக் போன்றவைகள் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி ரஞ்சி கோப்பை போட்டி தான் அவர்களை மற்றொரு நிலைக்கு எடுத்துச் செல்வதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை போட்டி தொடர்பாக பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஞ்சி கோப்பை போட்டி இரண்டு கட்டங்களாக நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதன்படி லீக் போட்டிகள் அனைத்தும் முதல் கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என்று செயலாளர் ஜெய் ஷா தகவல் வெளியிட்டுள்ளார். ரஞ்சி ரஞ்சி கோப்பைக்கான நாக் அவுட் போட்டிகள் அனைத்தும் ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.