2023 ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.. குவியும் வாழ்த்துக்கள்..!

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து 214 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய நிலையில் முதல் ஓவரிலேயே மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

இதனை அடுத்து மழை நின்ற பிறகு 15 ஓவர்களில் 171 என்ற இலக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது என்பதும் இதனை அடுத்து சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டின் சாம்பியன் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.