லக்னோ வெற்றியால் சிஎஸ்கேவுக்கு பிரகாசமான வாய்ப்பு.. ஆனால் இந்த 3 அணிகள் தோக்கணும்..!

By Bala Siva

Published:

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான திரில் போட்டியில் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை அணிக்கு பிளேஆப் சுற்றுக்கு செல்ல பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது

நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று இருந்தால் அந்த அணி சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கும். ஆனால் நேற்று மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 178 என்ற இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது.

அதே நேரத்தில் லக்னோ அணியும் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்பதால் 15 புள்ளிகள் உடன் சென்னை அணிக்கு பின்னால் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிஎஸ்கே 15 புள்ளிகளும் லக்னோ 15 புள்ளிகள் உடன் இரண்டாவது மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளன.

சிஎஸ்கே அணிக்கு ஆபத்தாக இருப்பது இரண்டே இரண்டு அணிகள் தான். அவை பெங்களூரு மற்றும் பஞ்சாப். இந்த இரு அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால் அவை இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று விட்டால் இரு அணிகளுமே சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளதால் அந்த ஒரு போட்டியிலும் மும்பை அணி வெற்றி பெற்று விட்டால் சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும் அல்லது மும்பை ஒரு போட்டியில் தோற்க வேண்டும். இந்த மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட சிஎஸ்கே அணி அடுத்த சுற்று சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் இருப்பதால் அந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் வேறு எந்த அணியின் வெற்றி தோல்வியை சிஎஸ்கே அணி கண்டுகொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளதால் எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் அணி ரசிகர்கள் தவிர மற்ற அனைத்து அனைத்து அணி ரசிகர்களும் தங்கள் விருப்பத்துக்குரிய அணி அடுத்த சுற்று செல்லுமா என்ற காண த்ரில்லுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.