செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு.!! வழிகாட்டி யார் தெரியுமா?

By Vetri P

Published:

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிகராக நம் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.

முன்னதாகவே ரஷ்யாவில் அறிவிக்கப்பட்ட நிலையில் போர் காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்திய செஸ் வீரர்களின் அணி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .

இந்திய அணியில் 20 பேர் இடம் பெறுவார்கள் என அகில இந்திய செஸ் பெடரேஷன் தகவல் அளித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவாக 20 பேர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்திய அணியின் வழிகாட்டியாக தமிழகத்தின் விசுவநாதன் ஆனந்த் செயல்படுவார் என்றும் அகில இந்திய செஸ் பெடரேஷன் கூறியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைசாலினி இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். 200 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Leave a Comment