CSK vs MI போட்டி; சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

Published:

சென்னை – மும்பை அணிகளுக்கிடயே நடைபெறும் போட்டியைக்கான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்தப் போட்டி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி போன்று காணப்படும் எனவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியானது வருகிற 6 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் வலுவாக காணப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபில் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்க இருக்கும் நிலையில் அதிகாலை முதலே டிக்கெட் வாங்குவதற்கு பல்வேறு பகுதியில் இருந்து ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என ஆர்வமுடன் டிக்கெட் வாங்குவதற்கு குவிந்தனர். இதுவரை நடந்த போட்டியை விட இந்த போட்டி விறுவிறுப்பாக காணப்படும் நிலையில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் அதிக அளவில் ஈடுப்பட்டிருந்தனர்.

நேற்று இரவு முதலே டிக்கெட் வாங்குவதற்கு காத்திருந்தோம், மேலும் இந்தப் போட்டி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி போன்று இருக்கும் எனவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.ஆகையால் தோனி தலைமையிலான சிஎஸ்கே போட்டியை காண்பதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.

மேலும் உங்களுக்காக...