தடுமாறும் ஆண்ட பரம்பரைகள்.. சிஎஸ்கே, மும்பை கோட்டை விடும் விஷயம்.. அவங்க செய்யுற பெரிய தப்பு என்ன தெரியுமா?..

பொதுவாக ஒரு ஐபிஎல் தொடர் நெருங்குகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் இரு அணியின் பெயர்கள் தான் எப்போதும் நினைவுக்கு வரும். ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று சரித்திரம் படைத்த மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

csk and mi issues in ipl 2026

பொதுவாக ஒரு ஐபிஎல் தொடர் நெருங்குகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் இரு அணியின் பெயர்கள் தான் எப்போதும் நினைவுக்கு வரும். ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று சரித்திரம் படைத்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தான். ஆனால் இந்த இரண்டு அணிகளுமே கடந்த 2,3 ஆண்டுகளாக மிகப்பெரிய ஒரு சரிவையும் தடுமாற்றத்தையும் கண்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இதே போல மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020 ஆம் ஆண்டு கோப்பையை வென்றிருந்த நிலையில் அதன் பின்னர் ஒரு சில முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் திணறித் தான் வருகின்றனர்.

ஆண்ட பரம்பரைக்கு வந்த சோதனை..

இப்படி ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரை என ஐபிஎல் தொடரில் குறிப்பிடப்பட்டு வந்த இரண்டு அணிகள் நடப்பு சீசனிலும் வெற்றியை பெற முடியாமல் திணறி வருகின்றனர். மும்பை மற்றும் சிஎஸ்கே ஆகிய இரண்டு அணிகளும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தலா 4 போட்டிகள் டி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளில் ஒரு அணியாவது இல்லாமல் இறுதிப் போட்டி நடப்பதே ஐபிஎல் தொடரில் அரிதான ஒரு நிகழ்வாக தான் இருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு வரலாறு ஐபிஎல் போட்டிகளில் மாற்றி எழுதப்பட்டு வரும் நிலையில் பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல ணிகள் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அதிலும் மும்பை அணியில் சிறந்த வீரர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பும்ரா, போல்ட், சூர்யகுமார், திலக் வர்மா, ரிக்கெட்லான் என எப்படிப்பட்ட எதிரணியினரையும் அச்சுறுத்தக் கூடிய வீரர்கள் உள்ளனர்.

ஆனால் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் ஆனதற்கு பின்னர் அது பிடிக்காமல் சூர்யகுமார், திலக் வர்மா உள்ளிட்ட பல வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக ஆடுவதாகவும் ஒரு சர்ச்சையான விமர்சன கருத்துக்கள் இருந்து வருகிறது. இந்த கருத்தை நிஜமாக்கும் வகையில் தான் பல மும்பை வீரர்களின் ஆட்டமும் அமைந்து வருகிறது. இதனால் ரோகித் அல்லது சூர்யகுமார் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக்க வேண்டும் என்றும் மும்பை ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

வேற வழியே இல்ல..

மும்பை அணியில் இப்படி ஒரு பிரச்சனை இருக்க, இன்னொரு புறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தோனி இல்லாமலேயே நான்கு போட்டிகளை ஆடி முடித்து விட்டது. இன்னொரு புறம் கடந்த மினி லத்தில் சிறந்த வீரர்களை சிஎஸ்கே அணி சொந்தமாக்காமல் போக அதுவே அவர்களுக்கு பெரிய வினையாகவும் ஆகிவிட்டது. இன்னொரு புறம் ஆடும் லெவனிலும் நிறைய குழப்பங்கள் இருக்க பேட்டிங் பொசிஷன் மற்றும் பந்து வீச்சு ரொட்டேஷன் என கேப்டனாக ருத்துராஜூம் நிறைய தவறுகளை செய்து வருகிறார்.

மேலும் வாய்ப்பு கிடைக்கும் சில வீரர்களும் தங்களது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஒரு சில வீரர்களின் ஆட்டத்தை பொறுத்தே சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பும் இருந்து வருகிறது. இப்படி மும்பை மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளுக்கு இன்னும் பத்து போட்டிள் மீதமிருக்கும் நிலையில் தங்கள் பக்கம் இருக்கும் பல முக்கியமான தவறுகளை திருத்திக் கொண்டு ஆடினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்று சூழலும் உள்ளது.