ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றுள்ள இந்திய அணியின் கேப்டன்! இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் சூடுபிடிக்க போகுதுடோய்……..

இன்றைய தினம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமான தினமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இன்று பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2022 ஆம் ஆண்டுக்கான…

IPL 6

இன்றைய தினம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமான தினமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இன்று பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களின் ஏலம் நடைபெறுகிறது.

இதில் சுமார் 600 வீரர்கள் ஏலத்தில் விடப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஐபிஎல் பட்டியலில் 377 இந்திய வீரர்கள் மற்றும் 223 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 600 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் முக்கிய வீரர்களாக சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ஷிகர் தவான், முகமது சமி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் அடிப்படை விலையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபக் சஹர், அம்பத்தி ராயுடு, ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேட் கம்மின்ஸ் போன்றவர்களும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களின் அடிப்படை விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பையில் ஜொலித்த இந்திய அணி கேப்டன் யாஷ் துல், ஆல்ரவுண்டர் ராஜ்பாவா விடப்படுகின்றனர். இதனால் கடந்த ஐபிஎல் சீசன்களில் அதிரடி காட்டிய பல வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதால் இன்று ஏலம் மிகவும் காரசார இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன