16 வருஷம் முன்னாடி சச்சின் செஞ்ச விஷயத்தை.. மீண்டும் டி20 சர்வதேச அரங்கில் பிரதிபலித்த அபிஷேக் சர்மா..

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்ததற்கு பின்னர் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. அணியில் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் வீரர்கள் தேர்விலேயே மாற்றங்களை ஏற்படுத்தி வரும்…

abishek sharma and sachin

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்ததற்கு பின்னர் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. அணியில் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் வீரர்கள் தேர்விலேயே மாற்றங்களை ஏற்படுத்தி வரும் கவுதம் கம்பீர், இளம் வீரர்களுக்கான வாய்ப்பையும் அதிகம் கொடுத்து வருகிறார்.

கொல்கத்தா அணியின் ஆலோசகராக கம்பீர் இருந்த போது அதில் சீனியர் மற்றும் இளம் வீரர்கள் என எந்தவித பாகுபாடும் பார்க்காமல் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தேற்றி வந்தார். அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுத்தது, ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி என ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது என இந்திய அணியின் பல முடிவுகள் அதிக கவனத்தை பெற்றிருந்தது.

அதே போல கவுதம் கம்பீர் வரவிற்கு பின் இந்திய அணியில் ஒரு மிக முக்கியமான மாற்றம் நடந்தது என்றால் அனைவருமே தற்போது பந்து வீசி வருவது தான். சச்சின் டெண்டுல்கர், சேவாக், கங்குலி என பேட்ஸ்மேன்கள் பலரும் ஒரு காலத்தில் பந்து வீச்சாளர்களாகவும் செயல்பட்டிருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ரோஹித், கோலி என எந்த பேட்ஸ்மேன்களும் அப்படி ஒரு பங்களிப்பை பவுலிங்கில் அளிக்காமல் இருந்து வந்தனர்.

ஆனால் கம்பீர் பயிற்சியாளராக மாறியதற்கு பின்னர் ரிங்கு சிங், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், கில், ரியன் பராக் என பேட்டிங்கில் ஜொலிக்கும் பல வீரர்களும் அதிக ஓவர்கள் பந்து வீசும் நிலையும் இருந்து வருகிறது. இதனால் முக்கியமான பந்து வீச்சாளர்கள் ஓவர்களில் ரன் செல்லும் போது மாற்று பந்து வீச்சாளர்களை முயற்சிக்கும் வாய்ப்பும் இந்திய அணிக்கு அமைந்துள்ளது.

அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவை போலவே ஆல் ரவுண்டர் வீரராக ஜொலிக்கும் நிதிஷ் குமார் ரெட்டி, வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 74 ரன்கள் சேர்த்ததுடன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இன்னொரு பக்கம் பேட்டிங்கில் இரண்டு போட்டிகளிலும் ஜொலிக்கத் தவறிய அபிஷேக் ஷர்மா, இரண்டாவது டி20 போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம், சச்சின் டெண்டுல்கர் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் வரிசையில் அபிஷேக் ஷர்மா முக்கியமான இடத்தை டி20 சர்வதேச போட்டிகளில் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பாக சச்சின் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்க வீரராக களமிறங்கி விக்கெட் எடுத்திருந்தார். அவருக்கு பின்னர் இர்பான் பதான் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கியதுடன் விக்கெட்டும் எடுத்திருந்தார். அந்த வரிசையில் மூன்றாவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கியதுடன் விக்கெட்டையும் எடுத்த வீரர் என்ற சிறப்பை அபிஷேக் ஷர்மா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது