85 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் அரங்கில் நடந்த அரிய நிகழ்வு.. 35 ஓவர்களில் புதிய வரலாறை எழுதிய இந்திய அணி..

By Ajith V

Published:

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல அணிகள் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்கள். ஆனால் அவை அனைத்தையும் மிஞ்சும் அளவுக்கு ஒரே இன்னிங்சில் அதுவும் 35 ஓர்களில் இந்திய அணி பல சாதனைகளை சொந்தமாக்கி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா. நிஜத்தில் அப்படியான ஒரு ஆட்டத்தை தான் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.

மழை காரணமாக இரண்டு நாட்கள் ரத்தான நிலையில் அடுத்த இரண்டு தினங்களில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் களமிறங்கி இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேறி ஆட வேண்டும் என்றால் வங்கதேசம் அணிக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் அந்த வாய்ப்பு எளிதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் மழை குறுக்கிட்டாலும் முடிந்த அளவுக்கு இரண்டு நாட்களில் இந்த போட்டியை முடிக்கும் வழிகளில் இந்திய அணி இறங்கி இருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் ரத்தாகி இருந்த நிலையில், நான்காவது தினத்தில் தான் போட்டி சரியாக ஆரம்பமாக இருந்தது. ஏற்கனவே முதல் இன்னிங்சை தொடங்கியிருந்த வங்கதேச அணி, மேற்கொண்டு ஆடி ரன்கள் சேர்க்க 233 ரன்களில் ஆல் அவுட்டாகி ருந்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கி இந்திய அணி நிதானத்தை கொஞ்சம் கூட கடைபிடிக்காமல் அதிரடி ஆட்டத்தை மட்டும் தான் கையில் எடுத்திருந்தது. இதனால் முதல் மூன்று வர்கள் முடிவிலேயே அவர்கள் 50 ரன்கள் கடந்ததுடன் மட்டுமில்லாமல் டெஸ்ட் அரங்கில் சாதனை ஒன்றையும் படைத்திருந்தனர். அது மட்டும் இல்லாமல் 50 ரன்கள், 100, 150, 200 மற்றும் 250 என ஐந்தையும் அதிவேகமாக தொட்ட அணி என்ற பெருமையை ஒரே இன்னிங்சில் தற்போது சொந்தமாக்கியுள்ளது.

இப்படி ஒரே போட்டியில் பல முத்தான சாதனைகளை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, 34.4 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்திருந்தது. ஒன்பது மிக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த போதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டிக்ளேர் செய்த இந்திய அணி நான்காவது நாள் முடிவில் வங்கதேச அணியின் இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளது.

இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே மீதி இருக்க இதில் நிச்சயம் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வங்கதேச அணியை சீக்கிரமாக ல் அவுட் செய்து விடும் என தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் சுமார் 85 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் நடைபெறாத ஒரு விஷயம் தற்போது நடந்துள்ளது. இந்திய அணி ஆடிய 34.4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் கூட இல்லை.

தற்கு முன்பாக, முதல் இன்னிங்சில் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு அணி மெய்டனே கொடுக்காமல் பேட்டிங் செய்திருந்தது. அவர்களை தொடர்ந்து இத்தனை ஆண்டுகளில் எந்த அணியாலும் முடியாத விஷயத்தை தற்போது இந்திய அணி சரித்திரம் படைத்துள்ளது.