44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய மகளிர் ஏ பிரிவு அணி வெற்றி.!!

By Vetri P

Published:

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியானது ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் எதிர்பார்ப்பும் பிரக்யானந்தா மேல் தான் திரும்பியது .

ஏனென்றால் அவர் உலக சாம்பியனை இரண்டு முறை தோற்கடித்துள்ளார். இதனால் இந்த முறை செஸ் ஒலிம்பியாட் பதக்கத்தை அவர் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயின் வீரரிடம் ஐந்தாவது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

அதன்படி கருப்பு நிற காய்களுடன் இறங்கிய பிரக்யானந்தா 85ஆவது நகர்வில் தோல்வியை தழுவினார். இவ்வாறு உள்ள நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி தொடரினை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி வீழ்த்தியுள்ளது. இந்திய மகளிர்  ஏ பிரிவில் தனியா சச் தேவ் வெற்றி பெற்றார். தமிழக வீராங்கனை வைசாலி, ஹரிகா, துரோணவல்லி, கொனேரு ஹம்பி போட்டிகளை சமன் செய்தனர்.

Leave a Comment