தோனி, ராகுல் சேர்ந்து செஞ்ச சம்பவம்.. சல்லி சல்லியா நொறுக்கி ஓவர்டேக் செஞ்ச ரிங்கு – நிதிஷ் ஜோடி..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகிய இருவரும் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப் தான் அடுத்த சில நாட்கள் பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது. கிரிக்கெட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் இளம் வீரர்களாக இருப்பவர்கள் நெருக்கடியான சூழலை சமாளிக்க சற்று பாடுபட்டு தான் தயாராவார்கள்.

ஆனால் சமீப காலமாக இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் நிறைந்திருப்பதால் முதல் தர போட்டிகளில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு நெருக்கடியான நேரத்தை மிக அழகாக கையாண்டு வருகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதி இருந்த இரண்டாவது டி20 போட்டியில் ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தது.

சூர்யகுமார், சஞ்சு சாம்சன், அபிஷேக் ர்மா ஆகியோர் மிக சொற்ப ரன்களில் குறுகிய இடைவேளையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர். அந்த சமயத்தில் நான்காவது விக்கெட்டிற்கு கைகோர்த்த ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகிய இருவருமே மிகச் சிறப்பாக ஆடி ஸ்கோரையும் உயர்த்தி இருந்தனர். இதில் ரிங்கு சிங் ஓரளவுக்கு அனுபவம் உள்ளவர் என்ற நிலையில் நிதிஷ் ரெட்டிக்கு இது இரண்டாவது சர்வதேச போட்டியாகும்.

ஆனாலும் அவர் ஆடிய ஆட்டம் நன்கு தேர்ந்த ஒரு பேட்ஸ்மேன் விளையாடுவது போலவும் அமைந்திருந்தது. முதல் 13 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிதிஷ் ரெட்டி, அடுத்த 21 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடினார் என்றே சொல்லலாம். 34 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த நிதிஷ் ரெட்டி, பந்துவீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருந்தார்.

இதே போல அவருடன் இணைந்து டிய ரிங்கு சிங் 53 ரன்கள் எடுக்க, இந்த பார்ட்னர்ஷிப்பின் காரணமாக இந்திய அணி 200 ரன்களையும் கடந்திருந்தது. தொடர்ந்து வங்கதேச அணி 135 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் நிதிஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

அப்படி ஒரு சூழலில் தான் எம் எஸ் தோனி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப்பை தாண்டி சாதனை படைத்துள்ளனர் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ஜோடி. இந்திய அணியை பொறுத்தவரையில் டி20 போட்டிகளில் நான்காவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக ருத்துராஜ்ற்றும் திலக் வர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குவித்த 141 ரன்கள் உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டில் நான்காவது விக்கெட்டிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தனர். அந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் தோனி மற்றும் கே எல் ராகுலின் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்து வந்தது. அதனை தற்போது கடந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி 108 ரன்களை சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.