2011, 2024.. இந்திய அணி WC வென்ற வருடங்களில்.. டிசம்பர் மாதம் ஒரே மாதிரி நடந்த சம்பவம்..

2011 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பின்னர் ஒரே மாதிரியான சம்பவம் இரண்டு ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அணி…

2011 WC and 2024 T20 wc for india

2011 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலக கோப்பையை வென்றதற்கு பின்னர் ஒரே மாதிரியான சம்பவம் இரண்டு ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அணி பற்றி இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து எடுத்துப் பார்த்தாலும் 2011 ஆம் ஆண்டு அவர்கள் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது மிக முக்கியமான ஒரு நாளாக அமைந்திருக்கும்.

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் பலம் வாய்ந்த பல அணிகளை வீழ்த்தி இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது உலகமே அதிசயித்து நின்றது. இதனைத் தொடர்ந்து பலமுறை இந்திய அணி பலமாக இருந்தாலும் ஒரு நாள் உலக கோப்பையை வெல்வதற்கு 28 ஆண்டுகள் எடுத்து விட்டது. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றிருந்த இந்திய அணி அதே தோனியின் தலைமையில் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை சொந்தமாக்கி இருந்தது.

மறக்க முடியாத 2011..

இறுதிப் போட்டியில் சில நெருக்கடியான சூழல்கள் உருவான போதும் அதனை திறம்பட கையாண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் 28 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் உலக கோப்பையை சொந்தமாக்க வழி செய்திருந்தனர்.
2011 WC

இதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணி, 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பையையும், 17 ஆண்டுகள் கழித்து வென்று சாதனை புரிந்திருந்தது. 1983, 2007, 2011, 2013 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒரு வருடமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்ற வருடத்தில் டிசம்பர் மாதம் பாக்சிங் டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதி இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய, அடுத்த 13 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி ஆடிய எந்த டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் தோல்வியடையவில்லை.

2011 – 2024 ஒற்றுமை

ஆனால் இந்த வருடம் இந்திய அணி உலக கோப்பையை வென்ற வருடத்தில் மெல்போர்ர்ன் மைதானத்தில் பாக்சிங் டே அன்று மோதிய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி கண்டுள்ளது.
India loss in Melbourne

கடந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி இரண்டு முறை மெல்போர்ன் மைதானத்தில் தோல்வி அடைந்திருந்த நிலையில் அதே ஆண்டில் அவர்கள் உலக கோப்பையை வென்றிருந்த ஒற்றுமை பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.