நம் எல்லோர் வீட்டிலும் ஒரு சில நேரங்களில் கெட்டது நடக்கலாம். சில சமயங்களில் வீணான சண்டை சச்சரவு ஏற்படுவது உடம்பு சுகம் இல்லாமல் போவது போன்றவைகள் நடக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் திடீரென்று நடக்கும் கெட்ட சம்பவங்களை கண் திருஷ்டியால் ஏற்பட்டிருக்கலாம் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். கல்லடிப்பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒருவன் எப்படி முன்னேறலாம் அவனை எப்படி தடுக்கலாம் என்ற கெட்ட சிந்தனையை கொண்ட மனிதர்கள் அதிகமாக இருக்கின்றனர். அப்படி நம் வீட்டில் கண் திருஷ்டியை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
ஒருவர் முன்னேறிவிட்டால் அவன் எப்படி முன்னேறினான் அவனை தடுக்க என்ன செய்யலாம் என பொறாமைப் படுபவரின் பார்வையை தான் கண் திருஷ்டி என கூறுவார்கள். இது அவர்கள் எண்ணத்தில் இருந்து நமக்கு எதிர்மறை சக்திகளாக வருகிறது. இந்த எதிர்மறை சக்திகள் பல இன்னல்களை ஏற்படுத்தும். நம் வீட்டில் இருந்து எதிர்மறை சக்திகளை போக்குவதற்கு முதலில் வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பை கையில் எடுத்து வீட்டில் உள்ள அனைவரின் தலையையும் சுற்றி தண்ணீரில் போடலாம்.
வீட்டு வாசலில் முன்பு பச்சை மிளகாய் எலுமிச்சை சிறிய கரித்துண்டு போன்றவற்றை கட்டி தொங்கவிடலாம். இது கெட்ட சக்திகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும். ஒரு எலுமிச்சை பழத்தை சரிபாதியாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளையும் மறுப்பாதியில் குங்குமத்தையும் தடவி வீட்டு நிலை வாசல் இரு பக்கமும் வைத்துவிட்டு ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை அதை தூக்கி எறிந்து வந்தால் கண் திருஷ்டி விலகும்.
இது மட்டுமல்லாமல் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் உள்ள அனைவருக்கும் கற்பூரம் தடவி வீட்டு வாசலில் கொளுத்தி வைக்கலாம். நம் வீட்டு முன் இருக்கும் தெரு மண்ணை ஒரு பிடி எடுத்து அதில் கடுகு உப்பு நான்கு வர மிளகாய் ஆகியவற்றை வைத்து கிழக்கு பார்த்து வீட்டில் இருப்பவர்களை நிற்க செய்து அனைவரையும் சுற்றி அடுப்பில் போட்டு விட வேண்டும். அப்படி இல்லை என்றால் முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை கால் கழுவி விட வேண்டும். இப்படி செய்தாலும் எதிர்மறை சக்திகள் நம் வீட்டில் நுழையாமல் அப்படியே வெளியே சென்று விடும்.
சிறு குழந்தைகள் சிறுவர்கள் போன்றவர்களுக்கு கருப்பு கயிறு கட்டுவதன் மூலமும் கண் திருஷ்டி படாமல் தடுக்க முடியும். பெண்கள் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்கு இடது காலில் கருப்பு கயிறை கட்டிக் கொள்ளலாம். ஆண்கள் வலது கைகளில் கட்டிக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் நம் வீட்டிற்குள் நுழையாமல் நல்லவைகள் நடக்கும் என்பது ஐதீகம்.