நாம் கோவிலுக்கு செல்லும்போது கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வதை பார்த்திருப்போம். ஒவ்வொருவரும் கோவிலுக்கு பூ பழம் தேங்காய் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். சிலர் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபடுவார்கள். ஆனால் அபிஷேகத்திற்கு பொருள் வாங்கிக் கொடுப்பவர்கள் வெகு சிலரே. இப்படி கடவுள்களுக்கு அபிஷேகத்துக்கு பொருள் வாங்கிக் கொடுக்கும் போது அதனுடைய பலன் மிக விரைவில் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நல்லெண்ணெய், பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர், மஞ்சள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பொருட்களில் அபிஷேகம் செய்யும்போது அதற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் அதற்கான தீர்வு கிடைக்க ஒவ்வொரு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யும்போது நாம் நினைத்த காரியம் நிறைவேறும். சுத்தமான பசும்பாலினால் கடவுளை அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும். இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்தால் மன அமைதி பெற்று முக்தி கிடைக்கும். இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
கடவுளுக்கு அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும். சுத்தமான தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும். கரும்புச்சாறு கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்யும்போது பிணிகள் அகலும். பசுந்தயிரினால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். எலுமிச்சை சாற்றால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் நல்லவைகள் நடக்கும்.
கடவுளுக்கு தேனை கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்வு இனிமையாகும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் மேம்படும் செல்வம் பெருகும். சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும். மஞ்சளால் அபிஷேகம் செய்தால் மங்களமான வாழ்வு ஆரோக்கியம் பெருகும். இப்படி அவரவர் தகுதிக்கேற்ப முடிந்ததை வாங்கி இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் நாம் நினைத்த வேண்டுதலுக்கு உடனடியாக பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.