அஷ்டமியில் எதையும் செய்யக்கூடாது என்கிறார்களே….இது ஏன்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

நாளைக்கு அஷ்டமி…ஊருக்குப் போக வேண்டாம் என வீட்டில் பெரியவங்க சொல்வதைக் கேட்டு இருப்போம். அதையும் மீறி ஏன்னு கேட்டால் சண்டை ஆகிவிடும். பொதுவாக எதைச் செய்தாலும் காலமறிந்து இடமறிந்து செய்ய வேண்டும் என பெரியோர்கள் சொல்லியிருக்காங்க.

செவ்வாய், சனிக்கிழமைகளில் எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது. அஷ்டமி, நவமியும் எதுவும் செய்யக்கூடாது. அதே போல பிரதமையிலும் எதுவும் செய்யக்கூடாது. இது தவிர ராகு காலம், எமகண்டம் நேரத்திலும் எதுவும் செய்யக்கூடாது.

அதுமட்டுமல்லாமல் கௌரி பஞ்சாங்கத்திலும் இந்த நேரங்களில் எதுவும் செய்யக்கூடாதுன்னு போட்டுருக்கும். அப்புறம் அமாவாசை, கரிநாள் இதெல்லாம் இருக்கு. இதெல்லாம் சேர்த்து ஒரு மாசத்துக்கு மொத்தம் எத்தனை நாள்கள் என்று கணக்குப் போட்டுப்பார்த்தால் இதுவே 23 நாள்களாகி விட்டது. மீதமுள்ள ஒரு வாரம் தான் நமக்கு நல்ல நாள்கள்.

இந்த திதிகளை எல்லாம் கெட்டது என எதற்காக சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

திதிகள் எல்லாம் சிவன் இடம் போய் தங்களது குறையை முறையிடுகிறது. என்ன சொல்லுதுன்னா அமாவாசை மட்டும் ஒரே ஒரு நாள் தான் வேலை பார்க்குது. நாங்கள்லாம் வேலை பார்க்குறதுக்கு 2 நாளாயிடுது. மத்தவங்களுக்கு எல்லாம் 2 நாள் வேலை. அவங்களுக்கு மட்டும் ஏன் 1 நாள் வேலை? அமாவாசையும் ஒரு நாள் தான் வருது. பௌர்ணமியும் ஒரு நாள் தான் வருதுன்னு சொல்லுது.

உடனே சிவபெருமான் சொல்றார். திதிகளாகிய உங்களுக்கு எல்லாம் தனித்துவமான சிறப்புகள் இருக்கு. உங்களைப் பற்றியே உங்களுக்குத் தெரியாததனால நானே உங்களுக்கு சொல்றேன் அப்படின்னு திதிகளின் சிறப்பை சிவபெருமானே சொல்கிறார்.

Durga Ashtami
Durga Ashtami

அப்போ எல்லா திதிகளும் வாய் மூடி கைகட்டி ஆகா பெருமான் நம்மைப் பற்றி இவ்வளவு உயர்வா சொல்றாரேன்னு பெருமையா இருக்கேன்னு கேட்குதுங்க. ஆனா இந்த அஷ்டமி, நவமி இரண்டும் அசால்டா அவர் என்ன சொல்றது? நாம என்ன கேட்குறதுன்னு இரண்டுமே அதுபாட்டுக்கு பேசிக்கிட்டு இருந்துருக்கு. அப்போ சிவன் சொல்கிறார்.

ரெண்டு பேரும் அலட்சியம் பண்ணி கேட்காத காரணத்தால் நீங்க ரெண்டு பேரும் உலக மக்களால அலட்சியம் செய்யப்படுவீர்கள். உங்களை நல்ல நாள்கள் என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சாபம் கொடுக்கிறார்.

உடனே அஷ்டமியும், நவமியும் தன் நிலை இப்படிப் போச்சே என வருந்தி எங்களை மன்னிச்சிடுங்க என சிவபெருமானிடமே சென்று கேட்குதுங்க. அப்போ சுவாமி சொல்றாரு. தவறை உணர்ந்தீங்க. சரி. காக்கும் கடவுள்கிட்ட போய் முறையிடுங்க.

அவரு இதுக்கு வழி சொல்வாருன்னு அவருக்கிட்டஅனுப்பி வைக்கிறாரு. இவங்க ரெண்டு பேரும் அங்கிருந்து பெருமாள்கிட்ட போய் பெருமாளே நாங்க தப்பு பண்ணிட்டோம் எங்களை மன்னிச்சிக்கோங்கன்னு சொல்கிறார்கள்.

Krishna Jayanthi
Krishna Jayanthi

பெருமான் சொல்வதைக் கேட்க வேண்டும் என இனியாவது புரிகிறதா என பெருமாள் கேட்க ஆமாம் சாமி தப்பு தான். எங்களைக் காப்பாத்துங்கன்னு சொல்றாங்க.

அதன்படி பெருமாளும் சரி கவலைப்படாதீங்க. என்னுடைய அவதார நாள்களில் இனிமேல் உங்களை வணங்கும் நாள்களாக நான் மாற்றித்தருகிறேன் என்றார்.

ராமாவதாரத்தில் நவமி அன்று அவதாரம் எடுத்தும், கிருஷ்ணவதாரத்தில் அஷ்டமி அன்று அவதாரம் எடுத்தும் பெருமாளே இந்த ஆகாத நாள்களை வணங்கும் நாள்களாக மாற்றினார். ராமரையும், கிருஷ்ணரையும் கும்பிடுகிறோம். .துர்கா அஷ்டமியும் இந்த அஷ்டமி திதியில் தான் வருகிறது.

அவர் அவதரித்த திதி மட்டும் நமக்கு ஏன் ஆகாத திதியாகிறது? அது ஆகும்னு தானே பெருமாளே வரம் கொடுத்தார். அமாவாசைன்னாலே கெட்டநாள். சூனியமான நாள். இருட்டான நாள்.

ஆகாத நாள் என பயம் உண்டு. ஆனால் இது போல் உயர்வான நாள் இல்லை. தர்ப்பணம் பண்ணலாம். தொடங்குவதற்கு என்றால் இந்த நாளும் உரிய நாள் தான்.

அமாவாசைக்குப் பிறகு தான் வளர்பிறை ஆரம்பிக்கிறது. அதனால வளரும் பிறைக்கு முன்பான நாளில் அதாவது அமாவாசையில் தான் தொழிலை ஆரம்பிக்கணும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.

இந்த நாளுக்கு நிறை நாள்னும் பேரு இருக்கு. ஜீவசமாதிகளின் ஆற்றல் அதிகமாக இருப்பதுவும் இந்த நாளில் தான். அமாவாசை, பௌர்ணமியில் கிரிவலம் வருவது இதனால் தான். அறிவியல் ரீதியாகவும் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகையில் தான் நடக்கிறது.

pournami
pournami

இதனால் இருவரது நலனும் சேர்ந்து கிடைக்கும். ஜாதகத்தில் சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் சொல்வோம். ஆத்மநலனும், மனோநலனும் ஒன்றாக சேர்ந்து செய்யும்போது தான் வெற்றி கிடைக்கும். அமாவாசை மற்றம் பௌர்ணமி நாள்களில் விரதமிருந்து கடவுளை வழிப

கிருஷ்ணரே இது உயர்வான நாள் என்று சொல்கிறார். அதனால்தான் இந்த இருநாள்களிலும் தவறாமல் விரதம் எடுக்கின்றனர். அதனால இனி வரக்கூடிய திதகளில் எல்லாமே நல்ல ஆளுதான். இறைவனின் திருவடிக்கு முன்பு நமக்கு இருட்டு, ஒளி என எந்த வேறுபாடும் வேண்டாம்.

இருளாகவே இருந்தாலும் இறைவனின் நம்பிக்கை அதை பேரொளியாகக் காட்டும் என்ற உறுதி மனதில் இருந்தால் எல்லா நாளுமே நல்ல நாள் தான்.

 

Leave a Comment